பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 385 காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று கருதினார்: அதற்காக, இரவு பகலென்று பாராமல் சிந்தித்தார் தலைவர் காமராஜர்! மகாத்மா காந்தியடிகள் அரும்பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சி, நாளுக்கு நாள் இவ்வாறு சீர்கெட்டு வருவதால், அந்த அழிவில் இருந்து காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், புத்தர் பெருமான் செய்து காட்டியதைப் போல இரண்டு வழிகள்தான் உண்டு! புத்தர் பிரான் அரியணையிலே வீற்றிருந்த போது ஒர்அவசரச் சட்டத்தை இயற்றி அதன் மூலமாகத் தான் கருதிய மனித ஞான ஒழுக்கச் சீர்திருத்தங்களைச் செய்திருக்கலாம்! பக்குவப்படாத பாமர மக்களிடம் சட்டத்தின் மூலம் சீர்திருத்தங்களைச் செய்வது வெற்றி பெறுமா என்பது மதில் மேல் பூனை (Cat on the wall) விவகாரம் ஆக, அப்படியும் நடக்கலாம்! இப்படியும் நடக்கலாம் அல்லவா? புத்தர் மரணமடைந்ததற்குப் பிறகு, புத்தர் பெருமானின் கொள்கைக்குரிய எதிரிகள், புத்தர் மகன் ராகுலனைக் கையகப்படுத்தி, அதை ஒர் அவசரச் சட்டம் மூலமாகச் சீர்திருத்தப்பட்ட புத்தரது நீதிநெறிகளை வைதிகர்கள் ஒன்று கூடி அழித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தார் - போதிமாதவன்! ஏன், இன்றும் அது நடக்கவில்லையா தமிழகத்தில்? இந்திய அளவிற்குக் கூட போகவேண்டாமே! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக வந்த பின்பு, அறிஞர் அண்ணா அவர்கட்கு நன்றி காட்டும் பண்பில், திண்டுக்கல் பகுதியை ஒரு மாவட்டமாக்கி அதற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார்! எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு முன்பு கலைஞர்கருணாநிதி அவர்கள் ஏழரை ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராகக் கோலோச்சினார்: அப்போது அவருக்கு தோன்றவில்லை அறிஞர் அண்ணா அவர்களுக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற நயத்தகு நனிநாகரிகப் பண்பு ஏழரையாண்டுக் காலமாக அதுபற்றி எழவே இல்லை.அவருக்கு அந்தச் சிந்தனை: மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதைத் திண்டுக்கல் மாவட்டமாக்கி அதற்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர். அரசு அங்கீகாரம் செய்து அறிவித்த பெயரை, கலைஞர் கருணாநிதி அவர்கள் எம்.ஜி.ஆர். இறந்த பின்பு, கலைஞரது