பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தேசியத் தலைவர் காமராஜர் இரண்டாண்டு கால ஆட்சியிலே அந்த அண்ணா பெயரால் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கி இருக்கலாம் அல்லவா? அறிஞர் அண்ணா பிறந்த செங்கை மாவட்டத்தையே கலைஞரது இடைக்கால இரண்டாண்டு ஆட்சியில் அரசு அங்கீகாரத்தோடு அறிஞர் அண்ணா மாவட்டம் என்று அதை மாற்றியிருக்கலாம் - இல்லையா? செய்தாரா? கலைஞர். முதல்வர் பதவி பறிபோன பின்பு, புரட்சித்தலைவி ஜெயலலிதாமுதல்வராகப் பதவியேற்றார்: கலைஞர் அவர்கள், செங்கை மாவட்டத்திற்கு தபால் கார்டுகள் மூலமாகச் சூட்டிய அண்ணா மாவட்டம் என்ற பெயரை ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டம் என்று மாற்றிவிட்டார். இதற்கும் அழுக்காறுதான் அடிப்படை! - காயிதே மில்லத் மாவட்டம் என்று கலைஞர் பெயர் சூட்டிய திண்டுக்கல் பகுதி அண்ணாமாவட்டத்தை, செல்வி அவர்கள் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் காட்டிய நன்றியின்படி மீண்டும் அண்ணா மாவட்டம் என்று பெயரை அமைத்து விட்டார். அரசியல் அழுக்காறுகள் எவரெவரிடம், எப்போதெப்போது கஜகர்ணம் - கோகர்ணம் போடுமோ எவன் கண்டான்? இந்த எண்ணம் புத்தர் பெருமானுக்கும் அன்றே தோன்றியதோ என்னவோ, வைதீகர்கள் எவனைப் பிடித்தும் - ஏதும் செய்துவிடுவார்கள் என்ற அச்சமோ என்னவோ அவருக்கு! அதனால், சித்தார்த்த சித்தர் தனது மகன் இராகுலனையும் நம்பாமல், தனது நாட்டு மக்கள் மனதையே மாற்ற நினைத்தார்! நாட்டு மக்கள் நன்மைக்காக- நல்வாழ்விற்காக எவனொருவன் தன்னையே தியாகம் செய்கின்றானோ, அவன் பெயர், தொண்டு, பணிகள், பண்புகள், கூடுமானவரை மக்கள் மத்தியிலே மனக் கல்வெட்டாக மாறி நிலைத்து நின்றுவிடும் என்று நம்பினார்! தம்மபத நாயகர்! காந்திபெருமான், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, மார்ட்டின் லூதர்கிங், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடைய பெயர்கள் எல்லாம் மக்களின் மனக்கல் வெட்டுகளாக மாறிப் பதிந்து விடவில்லையா-அதனைப் போல புத்தர் பிரானுக்கு அந்த ஞானோதயம் அவர் அரியணையிலே அமர்ந்திருந்தபோதே பூத்தது சிந்தனையில்! அந்தக் கபால சிந்தனையால், மான ஒளிச்சுடரின் வழிகாட்டலால் ஆசிய ஜோதியான புத்தர் பெருமான், தனது சிம்மாசனத்தைத் தூக்கி எறிந்தார். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து