பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தேசியத் தலைவர் காமராஜர் "Operation Premature democracy in a Poor Country is like allowing the infant child to leap in deepwell." - Netaji Bose "Letters to Nehru" 'அறிவு வளர்ச்சி பெறாத ஒரு ஏழ்மை நாட்டில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவது என்பது, விவரமறியாத பச்சிளம் குழந்தையை ஆழமான கிணற்றில் தள்ளி ஆழம் பார்ப்பதற்குச்சமம்" என்றார் சுபாஷ் பாபு, நேரு அவர்களுக்கு எழுதிய கடிதங்களில்! சுபாஷ் பாபு கூறிய இந்தக் கருத்துக்கேற்ப, இந்திய அறிவு வளர்ச்சி அன்று மட்டுமல்ல, இன்றும் முழுமையாகப் பெறாத ஒரு நாடுதான். இங்கே ஜனநாயகம் என்ற ஒரு குழந்தையை, ஊழல், தன்நலம், பங்குச் சந்தை, பந்த பாசம், சுற்றம் உற்றங்கள், என்ற ஆழமான கிணற்றிலே தள்ளிவிட்டோம்! அதனால் தான், செய்கின்ற யோக்கியத் தன்மையற்ற செயல்கட்கெல்லாம், மோசடி, லஞ்சலாவண்யம், கோடி கோடி பல்கோடி கொள்ளைத் தனங்கள் புரிகின்ற அரசியல் திருட்டுகளுக்கெல்லாம் கட்சி, ஜனநாயகம் என்ற பொன்முலாம் பூசி மக்களை ஏமாற்றிவரும் நிலையை நாம் இன்றும் காண்கிறோம்; அனுபவித்தும் வருகின்றோம்! "If the Voters are fools, the Legislature will be rascals". argårps, தெரியாமலா பேரறிஞர் பெர்னாட் ஷா 'வாக்காளர்கள் முட்டாள்களாக இருந்தால் ஆட்சி அவை உறுப்பினர்கள் அயோக்கியர்களாக இருப்பார்கள் என்று! ஜனநாயகத்தை இன்று யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அரசியல் திருடர்கள் எல்லாம், பதவிவெறியர்கள் எல்லாம், சுயநல வெறியேறி, சுகபோகப் போதையேறி, ஜனநாயகத் தத்துவத்தின் குரல்வளையைக் கோரமாக நெருக்கி, நாள்தோறும் ஜனநாயகப் படுகொலையை அரசியலில் செய்து வருவதைப் பார்க்கின்றோம். அதனால்தான், பிரதமர் நேரு இந்தியக் காங்கிரஸ்காரர்களின் அரசியல் அட்டகாச ஆர்ப்பாட்ட ஊழல் மனங்களின் வேதனைகளைப் பார்த்து, அனுபவித்து, நோயெனும் கவலையால், அவர்தாக்கப்பட்டு இறந்தார் - பாவம்! இதோ இந்திய விடுதலைக்கு இரவு பகலென்று பாராமல் உழைத்துழைத்து உருக்குலைந்து தனது இன்னுயிரை ஈந்த காந்தி பெருமான், ஹரிஜன் ஏட்டில் எழுதிய மனவேதனை மொழிகளை ஒரு முறை படியுங்கள். உண்மைகள் சில உங்களுக்குப் புரியும்!