பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தேசியத் தலைவர் காமராஜர் பிளேக் நோய் என்ற நெருப்பிற்கு மதம் என்ற நெய் ஊற்றப்பட்டதால், பூனா நகரிலே அப்போது கலவரம் மூண்டது; இன நெருப்பு ஊரையே இருட்புகையாக்கியது! பிளேக் நோயைத் தடுக்க வீடு வீடாக எலிவேட்டைக்கு சென்ற இரண்டு வெள்ளை அதிகாரிகள், அவர்கள் சென்ற ஜீப் காரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். அதனால், பூனா நகரம் மதக் கலவரத்தில் சிக்குண்டு குழப்பம் அடைந்திருந்தது! கலவரம் ஏற்பட்டு, ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது! அதனால், பூனாவில் கூட வேண்டிய இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி பம்பாயில் கூடியது. அன்றைய சென்னை மகானத்தைச் சேர்ந்த பி. ரங்கைய நாயுடு, வழக்கறிஞர் பி. அனந்தார்ச்சலு, எஸ். சுப்பிரமணிய ஐயர், இந்து நாளேடு ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர், எம். வீரராகவாச்சாரியார், திவான் பகதூர் ஆர். ரகுநாதராவ், காடம்பி சுந்தரராமன், டி. என். ஐயர், தஞ்சை எஸ்.ஏ. சுவாமிநாத ஐயர், எஸ். வெங்கட்ட சுப் பராயலு, குத்தி கேசவப் பிள்ளை போன்ற பலர் சென்று அதில் கலந்து கொண்டார்கள். திரு. ஹியூம் அனைவரையும் வரவேற்றுக் கூட்டத்தைத் துவக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாக அமைப்பில், இந்தியர்களுக்கு அதிக அளவு பதவிகள் வழங்கப்படல் வேண்டும், கல்வி நீதித்துறைகளில், நியாயமான உரிமைகள், பதவிகள், வசதிகள் கொடுக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டன. பம்பாய் நகரில், இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்பு, திரு.ஹியூம் அவர்கள் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். காங்கிரஸ் மகாசபை பம்பாயில் கூடுவதற்கான நோக்கங்களை அந்த நாட்டு மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அங்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அணியிலே புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தக்காரர்கள் பலரையும் கண்டு பேசினார். இந்தியர் பிரச்னைக்கு ஆதரவு கொடுக்குமாறு அவர் வேண்டினார்: இலண்டனில் துண்டறிக்கை! இந்தியாவில் வாழும் மக்களின் உண்மையான அவலநிலை, இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் புரிய வேண்டும் என்ற G#133;goal), “THE OLD MAN'S HOPE, 'முதியவனுடைய நம்பிக்கை' என்ற தலைப்பிட்டதுண்டறிக்கைகளை அச்சடித்து,