பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி - 389 'காங்கிரசிலே காணப்படும் ஊழலே, பலாத்காரம் நுழைந்து விட்டது என்பதன் அறிகுறியாகும். காங்கிரஸ் மகாசபை, எந்த நியாயமான உரிமையையேனும் மிதித்துத் தள்ளுமானால், அந்த நேரமே, அதன் பெருமையும் செல்வாக்கும் அழிந்து விடும். 'காங்கிரஸ் கட்சி நாட்டின், மக்களின் நலத்திற்கு விரோதமாக நடக்குமோ, அன்று அது தானாகவே அழிந்துபோகும்.' 'பதவி ஏற்றதும் எதைச் செய்வதாகக் காங்கிரஸ் ஆட்சி உறுதிமொழி கூறி ஏற்றுக் கொண்டதோ, அதை இன்னமும் செய்யவில்லை என்ற என்னுடைய அபிப்ராயம் அப்படியேதான் இருந்து வருகிறது.' - காந்தியடிகள் 'ஹரிஜன் 12.7.1946. 'பாரத நாட்டிற்காக விடுதலை விளக்கை ஏற்றி, நம்மைச் சூழ்ந்திருந்த அடிமை இருளை அகற்றிய அருட்பெருஞ்சோதியாகத் தோன்றிய காந்தியடிகளின் தத்துவங்களை மறந்து போன காங்கிரஸ்காரர்களே இன்றைய ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். அதன் எதிரொலிதான் ஜனநாயக ஊழல்களின் உருவாக்க நிலை!" 'அதனால்தான், பிரதமர் நேரு போன்ற தியாக மூர்த்திகளை மீளா நோயிலே தள்ளிச் சாகடிக்கும் பதவி வெறியர்கள் - ஊழலாட்சியிலே அமர்ந்து விட்டார்கள்' இந்த எச்சரிக்கையை, என். நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1961ஆம் ஆண்டில் தலைமை வகித்த பவநகர்அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி மாநாட்டிலே விடுத்துள்ளார். இதோ படியுங்கள் அந்த எச்சரிக்கை வெடிகுண்டுகளை "The Congress because of Historical reasons has come to be a great instrument of service to the people it naturally attracts to itself people who hunger for power" The facts remain, that congressmen are generally more active in seats of Power in the secretariats and honest god's work in the field in the villages is becoming more and more rare." There is nothing wrong in seeking power. What is wrong are the Machinations and Cheap intrigue to grab power, for selfish ends." (N. Sanjeeva Reddy-Bhavanagar Congress Speech -1961)