பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தேசியத் தலைவர் காமராஜர் 'காங்கிரஸ் கட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய இயக்கம். அதன் காரணமாகத்தான் அது மக்களுக்குத் தொண்டுபுரியும் ஒரு கருவியாக மாறியுள்ளது. ஆனால், இயல்பாகவே அது பதவிப் பசியோடு ஏங்குபவர்களைக் கவரக் கூடியதாக உள்ளது.” “பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் செயலாற்றுபவர்களே, காங்கிரஸ் கட்சியில்அதிகமாகப் பெருகி வருகின்றார்கள். ' "கிராம சேவையே கடவுள் தொண்டுகளாகக் கருதப்படும் எண்ணமுள்ளோர், காங்கிரசிலே மிக அரிதாகி வருகின்றார்கள் என்பதுதான் உண்மை.” 'பதவிகளைத் தேடுவதோ- அதிகாரங்களை நாடுவதோ தவறல்ல! ஆனால், அவற்றை அடைவதற்காகவும் தங்கள் சுயநலத்திற்காகவும், காங்கிரஸ்காரர்கள் இயங்கும் முறைகளும் . கையாளும் கீழ்த்தரமான செயல்களும் - தவறானவைகளாகும். - என்று, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராகவும், ஆந்திர முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சஞ்சீவரெட்டியார் பவநகர் மாநாட்டில் ஆற்றிய காங்கிரஸ் தலைமையுரையிலே காங்கிரஸ் கட்சியை எச்சரித்தார்: இத்தனை பெரிய ஊழல்களைக் காங்கிரஸ் கட்சியிலே மட்டுமல்ல, ஆட்சி புரிவோரிடம் இருந்தும் அதை அகற்றிடப் போர்க்கொடியை ஏந்தினார். பாண்டி மண்பெற்ற மாவீரர்தலைவர் காமராஜர்! தன்நலம், ஊழல், ஊதாரித்தனம் ஆடம்பரப் பதவி, வாழ்வு, ஆட்சியிலே ஊழல், பதவிப் பசி வெறி, மக்கள் வரிப் பணங்களை அரசியல் பெயரால் செய்யும் மோசடிகள், இவற்றையெல்லாம் எதிர்க்கப்போர்க்களம் புறப்பாட்டுப்பறை கொட்டவீறிட்டெழுந்தார் காமராஜர். போதி மாதவன் சித்தார்த்தன் தனது அரசுப் பொறுப்புகளைத் தூக்கி எறிந்தது போல, தலைவர் காமராஜர் தனது அற்புதமான மக்கட் செல்வாக்குடைய தமிழக முதலமைச்சர் என்ற தனது பொற்கால ஆட்சியின் பதவியினை விட்டு விலகினார் மக்கள் வீதியிலே ஒரு மகரிஷியைப்போல வந்து நின்றார்-தனிமனிதனாக! இரண்டாம் உலகப் போர் மூண்டபோது உலகையே உலுக்கி அதிரவைத்த மாவீரன் இட்லர், தலைவர் காமராஜர் ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தாற் போல பேசுகிறார் பாருங்கள்: Governing of a state by a benevelant worker, who endows himself for the cause of the downtrodden people, who constitute