பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 391 majority in the pouplation is real democracy. This is my Mission. - Adolph Hitler. (The Main Camp) 'பெரும்பான்மையாக உள்ள ஏழை மக்களுக்காக எல்லாத் தியாகங்களையும் செய்து, அவர்களுக்காகவே உழைத்து ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தன்னலமற்ற தனிமனிதனின் ஆட்சிதான் உண்மையான ஜனநாயகம்' என்றார் இட்லர். இந்த ஜனநாயக இலக்கணத்திற்கேற்ப, ஏழை மக்கள் வாழ்வே தனது வாழ்வு என்ற மனித நேயமாண்புக்கு இலக்கணமாகத் தனது முதலமைச்சர் பதவியைத் துறந்தது அவர்தனி மனிதரானார்: மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிபுரியும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தன்னலமற்றதாக்கி, உண்மை ஜனநாயக ஆட்சியை உருவாக்கிட விரும்பினார். தமிழகத்தில் அவர் ஆட்சிபுரிந்தபோது, ஆட்சியைத் தனது கட்டுக்கோப்புக்குள்ளேயே நிலைநிறுத்தி, தனிமனிதன் ஆட்சியாகவே காமராஜர் நடத்தினார்: கட்சியையும் தனது வரம்புக்குள்ளேயே கட்டுப்படுத்தி, தன்னை மீறாமல் தான்தான் கட்சி, கட்சிதான் அவர் என்ற ஒருமைப்பாட்டோடு ஆட்சிக்கு உறுதுணையாகத் தனது கட்சியையும் நிலைநிறுத்திக் காட்டினார். ஏழை மக்களுக்கும் - தேசிய விடுதலைக்கும் உழைப்பதையே நோக்கமாகக் கொண்டு தனது திருமணத்தின் மீதும் அக்கறை செலுத்தாமல் - சாகும்வரை, பிரம்மசாரியாகவே, தனிமனிதனா கவே காமராஜர் நாட்டுக்கு உழைத்தார். பதவிகளால் பெறுகின்ற சுகபோகங்களை அறவே அவர் வெறுத்தார் துறந்தார்: தன்னால் உருவாக்கப்பட்ட ஒர் ஆட்சியிலே தன்னலமற்ற மனிதனாகத் தான் திகழ்ந்து, இறுதிக் காலம் வரை அவர் எளிமையாகவே, ஏழைமக்களுக்காகவே உழைத்து வாழ்ந்து, சுற்றமும் உற்றமுமற்ற தனிமனிதனாகவே உழன்று, இந்திய ஜனநாயகம் இனிதாக ஓங்க, தலைவர் காமராஜர் தன்னைச் சர்வ பரித் தியாகம் செய்து கொண்டார். 'தன்னைப் போலவே மற்ற பிற காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், அவரவர் வகிக்கும் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு, மக்கள் பணிகளை, கட்சிப் பணிகளை ஆற்றிட முன் வரவேண்டும் என்று சிந்தித்தார் - விரும்பினார்!’