பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 தேசியத்தலைவர் காமராஜர் காமராஜர் திட்டம் 'ஒரு காங்கிரஸ் தலைவர் ஒரே ஒரு பதவியைத் தான் வகிக்க வேண்டும் பிற காங்கிரசார் நாள்தோறும் பொதுமக்களைச்சந்தித்து அவரவர்கள் குறைகளைக் கேட்டு அவ்வவற்றிற்கு ஏற்றவாறு தேச சேவை புரிய வேண்டும்.” ஒருவர்தான் ஒரு பதவியிலே இருக்கவேண்டும். மற்றவர்.அதைப் பார்த்துப் பொறாமையோ விரோதமோ கொள்ளக்கூடாது.” அவர்கள், காங்கிரஸ் கட்சியின் எந்தப் பதவிகளிலும் இல்லாமலேயே கட்சி நிர்மாணப் பணிகளைச் செய்திட முன் வரவேண்டும்." என்று, முடிவெடுத்தார்தலைவர்காமராஜ் அவர்கள். 1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நேரு அவர்களை, ஐதராபாத் நகரிலே காமராஜ் அவர்கள் சந்தித்து, தமது எண்ணங்களையும் முடிவையும் தெரிவித்தார். இந்த அரிய சிந்தனை, உழைப்பு, வேட்கை, பொதுநலம், கட்சித் தொண்டு, தன்னுணர்வுகளை ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் பெற்றுக் கட்சித் தொண்டாற்றினால், தேசிய சேவை, நமது இலட்சிய நோக்கம், கட்சிப் புனிதம் அனைத்தும் காந்தியடிகள் காலத்தில் இருந்ததைப் போல நமது பேரியக்கம் காட்சியளிக்கும்’ என்று பிரதமர் நேரு அவர்களிடம் விரிவாக விளக்கினார்: காமராஜருக்கு நேரு பாராட்டு! உடனே பிரதமர் அவர்கள், துள்ளி எழுந்து கட்டியணைத்து, தலைவர் காமராசரைப் பாராட்டி மகிழ்ந்தார் நோய் வந்தவனுக்குத் தான் மருந்து அருமை தெரியும் - புரியும்! “@g off posio Gooséâulbs (Shock Treatment, Kamaraj Plan) காமராஜ் திட்டம். காமராஜ் பிளான் என்று பிரதமர் படபடவென்று பல சொற்களை உதிர்த்துப் பாராட்டி அதற்குப் பெயர் சூட்டினார். ஒஹோ - ஹோ என்று கலகலப்பாக அவர் சிரித்தார் நல்ல திட்டம், நல்ல பிளான் என்று கூறி நேரு மகிழ்ந்தார்! இந்த கே.பிளான் திட்டத்திற்கேற்ப, மேலும் விரிவாகக் கலந்துரையாடிட காமராஜர் அவர்களைப் பிரதமர் நேரு அவர்கள் டெல்லிக்கு வருமாறு அழைத்தார். அவர் அழைப்பை ஏற்றுத் தலைவர் டெல்லிக்குச் சென்று மீண்டும் இருவரும் ஆழ்ந்து பேசினார்கள்.