பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 393 டெல்லி நாடாளுமன்றமும் - அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியும், தலைவர் காமராஜர் அவர்களது திட்டத்தை ஏற்றன. தலைவர் காமராஜர் அவர்கள், தமிழக முதலமைச்சர் பதவியை விட்டு விலகிக் கட்சித் தொண்டாற்றப் போவதாக அறிவித்தார். தமிழ் நாட்டில் பலவீனமடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தப் போவதாகவும் கூறினார். பிரதமர் நேருவும் விலகுவதாகக் கூறினார்! தலைவர் அவர்கள் கூறியதைக் கேட்ட நேரு அவர்கள், தாமும் பிரதமர் பதவியை விட்டு விலகுவதாக முடிவெடுத்தார். தலைவர் காமராஜ் அவர்களும், பிற காங்கிரஸ் தலைவர்களும் பிரதமர் அவர்கள் விலகக் கூடாதென்று எதிர்த்தார்கள். இந்தத் தருணத்தில்பிரதமர் நேரு பதவியை விட்டு விலகுவது நாட்டிற்கு நன்மை நல்காது என்று அவர்கள் எல்லாரும் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், நாடாளுமன்றத்திலே இருந்த அமைச்சர்களும், மாநிலங்களிலே உள்ள முதலமைச்சர்களும் யார் யார் விலகப் போகிறார்களோ அவர்களுடைய பட்டியலைப் பிரதமர் நேருவிடம் கொடுத்தார்கள். அகில இந்திய அளவில் ஏறக்குறைய42 பேர்ராஜிநாமாக்களைப் பிரதமர் நேரு நாட்டிற்கு அறிவித்தார். அவர்கள் பெயர் சில வருமாறு: பதவி விலகுவோர் பட்டியல்! தமிழ்நாடு முதலமைச்சர்காமராஜ், ஒரிசாமுதல்வர் பட்நாய்க், காஷ்மீர் முதல்வர் பக்ஷி குலாம் முகமது, உத்தரப் பிரதேச முதல்வர்.சி.பி. குப்தா, பிகாரில் பீதோனந்தரே, மத்தியப் பிரதேசம் மண்டோலான் போன்ற ஆறு முதல்வரும் காமராஜ் திட்டப்படி பதவி விலகினார்கள். நாடாளுமன்ற அமைச்சர்களான மொரார்ஜி தேசாய், லால் பகதூர்சாஸ்திரி, எஸ்.கே. பாட்டில், ஜெகஜீவன்ராம், பி. கோபால் ரெட்டி, கே.எல். பூரீமாலி ஆகியோருடன் வேறு பிற மாநில அமைச்சர்களும் விலகியதாகக் கூறினார் பிரதமர் நேரு. காங்கிரஸ் கட்சிப் பணிகளுக்காக அமைச்சர்கள் தங்களது பதவிகளை விட்டு விலகிய அற்புத அரசியல்வரலாறு வேறு எந்த நாட்டிலும் அன்று வரை என்ன: இன்று வரைகூட நடந்ததே இல்லை. இதுதான் காமராஜ் அவர்களது கே. பிளான் திட்டத்தின் பெருமை! -