பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394. தேசியத் தலைவர் காமராஜர் தலைவர் காமராஜ் ஒருவரைத் தவிர, பதவிகளை விட்டு விலகியவர்கள் அனைவரும் சரிவரக் கட்சிப் பணிகளை ஆற்றவில்லை. அவர்களை எல்லாம் பதவிகளிலே இருந்து வெளியேற்றவே காமராஜ் திட்டம் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கருதிவிட்டார்கள். இதற்கிடையே, இந்திய சீன ஆக்ரமிப்புப் போர் உருவாகவே, பிரதமர் நேருவுக்கு எதிரானவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு அவருக்கு மேலும் தொல்லைகளைத் தந்து வந்தார்கள். இந்தக் கவலைகள் அதிகமாக ஆக பிரதமர் நேருவின் உடல், நோய்ப் பிடியிலே சிக்கியது. நாளாக நாளாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டு, எவ்விதப் பணியையும் செய்ய முடியாமல் பலவீனப்பட்டார். பக்தவத்சலம் முதல்வரானார் தலைவர் காமராஜ் அவர்கள் 1963-ஆம் ஆண்டில் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ஆம் நாள், தமது முதலமைச்சர் பதவியைத் துறந்தார். எம். பக்தவத்சலம் அவர்களைத் தமிழ் நாட்டின் முதல்வராக்கினார். பதவியிலும் தகுதியிலும் காங்கிரஸ்காரர்கள் ஆசைப்படும் வரை, சோஷலிசம் இந்த நாட்டில் அமைவது அருமையே! - என்று, காந்தியடிகள் கூறிய அரசியல் தத்துவத்திற்கேற்ப, தலைவர் காமராஜ் தனது பதவியைத் தூக்கி எறிந்தார். 1963-ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 3,4-ஆம் நாட்களில், ஜெய்ப்பூர் நகரில் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி மாநாடு கூடியது. ஆந்திர மாநில முதல்வராக இருந்த டி. சஞ்சீவய்யா அம் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். அந்தப் பேரவையில், தலைவர்காமராஜ் அவர்களின்கே. பிளான் திட்டம் பலத்த சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது. அந்தத் திட்டத்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட புத்துணர்ச்சிகளை, புதிய பொலிவைப் பிரதமர் நேரு அவர்கள் விளக்கிப் பேசினார். “காமராஜ் அவர்களின்திட்டம் காங்கிரஸ் வரலாற்றில் ஒரு புதிய புரட்சிகரமான திட்டம், அதை நான் வரவேற்கிறேன் - பாராட்டி ஏற்கிறேன்! புவனேஸ்வரம் நகரில் அடுத்துக்கூடும் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவை மாநாட்டிற்குத் தலைவர் காமராஜர்தான் தலைமை வகிக்க வேண்டும். கே. பிளான் திட்டத்தை நிறைவேற்றிட அவர் தலைமை வகிப்பதை நாடு வரவேற்கிறது” என்று, பிரதமர் நேரு குறிப்பிட்டார்.