பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 395 பிரதமர் நேரு அவர்களின் கருத்தை, ஒரிசா மாநில புவனேஸ்வரம் மாநாட்டில் நிறைவேற்றிட அகில இநதிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் புவனேஸ்வரம் நகர் நோக்கிப் புறப்பட்டார்கள்! தலைவர் காமராஜ், அவர்களுடன் தமிழக முதல்வர் எம். பக்தவத்சலமும் பிற தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் செயல் வீரர்களும் ஏறக்குறைய ஆயிரம் பேர்களுடன் ஒரிசா மாநிலத்தில் நடைபெறும் புவனேஸ்வரம் மாநாட்டிற்குப் புறப்பட்டார்கள். “புவனேஸ்வரம் ஸ்பெஷல்' என்ற புவனேஸ்வரம் தனி இரயில் தலைவர் காமராஜர் அவர்களையும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் சுமந்துகொண்டு, சென்னைசென்ட்ரல் ரயில்வே நிலையத்திலே இருந்து புறப்பட்ட கோலாகலக் காட்சியை நாம் ஆரம்பத்திலேயே படித்தோம். புவனேஸ்வரம் நகர் மாநாடு முடிந்த பின்பு, காலாகாந்தி என்று வடபுல மக்களால் பாசமுடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜ் அவர்கள், தற்போது அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சித் தலைவரென்ற தகுதியோடு, பரத கண்டம் முழுவதும் சமதர்மச் சுற்றுப் பயணம் புரிந்து, இந்திய மக்களைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்! பெருந்தலைவர் காமராஜ் அவர்கள், கருப்பு நிறத் தோற்றம் உடையவரானதால், வடநாட்டுப் பொதுமக்களும் தலைவர்களும் அவரைக் காலா காந்தி என்று அன்பு தவழ அழைத்து, அவர் செல்லும் இடங்களிலே எல்லாம் அவரைக் காலா காந்திஜி காமராஜ்கி ஜே என்று போற்றி முழக்கமிட்டார்கள். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்! பஞ்சாப், ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, தமிழகம், மராட்டியம், குஜராத், வங்காளம் போன்ற மாநிலப் பகுதிகளுக்கு எல்லாம் 18 நாட்கள் தொடர்ந்து சென்று தமது சமதர்மக் கொள்கைகளைப் பேசிப் பரப்பினார். அந்தப் பயணத்தைக் காமராஜ் சமதர்ம யாத்திரை' என்று இந்திய மக்கள் அழைத்தார்கள். அவர் பேசும் கூட்டங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அந்த எளிய தலைவரின் கருத்துக்களைக் கேட்டார்கள்.