பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதள் நேரு மறைந்தார்: புவனேஸ்வரம் மாநகரில் 68-வது காங்கிரஸ் கட்சிப் பேரவை மாநாடு 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் நாள் துவங்கி நடைபெற்றது. காலா காந்தி காமராஜ் வாழ்க! காங்கிரஸ் கட்சியின் சாதாரண உறுப்பினர் காமராஜ், நகர, வட்ட, மாவட்ட செயல் வீரராக விளங்கிய காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவரான காமராஜர், தியாகங்கள் பலவற்றைச் செய்த தியாகி காமராஜர், தமிழக முதலமைச்சர் காமராஜர், அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிப் பெருந்தலைவர் காமராஜர் ஆனார். அதனால், அவர் பெருந்தலைவர் என்று காங்கிரஸ் செயல் வீரர்களாலும், இந்தியத் தலைவர்களாலும், பொது மக்களாலும் அழைக்கப்பட்டார். - அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கே பெருந்தலைவரான காமராஜ் அவர்கள், தனது உயிர் இலட்சியமான சமதர்ம சுற்றுப்பயணத்தை மேற் கொண்டார். 'என்னுடைய இறுதிப் போராட்டம், சோஷலிச சமுதாயத்தை இந்தியாவில் அமைக்கும் போராட்டம்தான். இந்தக் கடைசி யுத்தத்தை நடத்திட நான் துணிந்து விட்டேன். இதற்கு இந்திய மக்களுடைய பேராதரவு எனக்குத் தேவை." 'பொது மக்களே, உங்களுடைய ஒத்துழைப்பை எனக்கு அளிப்பீர்களா? - என்று, அவர் சென்று கலந்து கொண்ட இந்திய நகரங்களில் எல்லாம், மாநிலந்தோறும் மக்களைப் பார்த்துக் கேட்டார். அங்கங்கே திரண்ட அந்தந்த மாநிலப் பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும், 'அளிப்போம் அளிப்போம் எங்கள் ஒத்துழைப்பைத் தவறாமல் அளிப்போம் ' என்ற பதில் முழக்கங்களை எழுப்பினார்கள்.