பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 397 இந்த சோசலிசக் சிந்தனையின் செயற்பாடுகளைக் கொண்ட காட்சிகள், நாடெங்குமுள்ள கிராமங்கள் தோறும், பட்டிதொட்டிகள், சிற்றுார் - பேரூர் நகரங்கள் தோறும் காட்சியளித்தன. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், மக்கள் முகங்களைப் பார்த்துப்பேசிட எழுந்ததும் அதற்குப்பதிலாக மக்கள் 'காலாகாந்திஜிக்கு ஜெய் என்று அவர்கள் எழுப்பும் முழக்கத்தைக் கேட்டு பிற காங்கிரஸ் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நாட்டில் ஏதோ ஒரு புதிய அரசியல் போர்முழக்கம் உருவாவதைப் போல வியப்படைந்தார்கள். 'சோஷலிச தத்துவம் என்றால் என்ன? அதை எப்படி நிறைவேற்ற வேண்டும்? அதன் எதிரிகள் யார். யார்? அவர்களை எவ்வாறு வெற்றி கொள்வது?’ என்ற வினாக்களை அவர் மக்கள் முன்பு கேட்டு, அதற்கான காரண காரியங்களை விளக்குவார். உடனே பலத்த கடலொலி ஒத்த கையொலி பேரிடி போல எதிரொலித்து எழும். பெருந்தலைவரின் சமதர்ம விளக்கங்களின் இடையிடையே அவரது தன்னலமற்ற பேச்சில் எழுந்த உண்மைகள் மக்களைக் கவர்ந்தன. அதனால், அவரை இந்திய மக்கள் மற்ற வடநாட்டுத் தலைவர்களை விட, பிரதமர் நேருவிற்குப் பிறகு அதிகமாக நேசித்தார்கள்! மக்கள் அவருடைய ஏழை - பணக்காரப் பேச்சைக் கேட்கப் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஆங்காங்கே பெருங் கூட்டமாகத் திரண்டார்கள். “மொழிப் பிரச்னையில் பிரதமர் நேருஜியின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே, அதே மாதிரி சோஷலிச சமுதாயத்தை அமைப்பதிலும் நேருஜி வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று ஒருவேளை உணவுக்கும் வழியில்லாத ஏழை கேட்கமாட்டானா? அவன் ஆசையை நாம் ஆதரிக்க வேண்டாமா?’’ - என்று, பேசும் கூட்டங்களிலே எல்லாம் மக்களைப் பார்த்துக் கேட்டார் பெருந்தலைவர் மக்கள் தங்களது கையொலி முழக்கங்களால் அவர் மீது அன்புப் பூமழை பெய்தார்கள். நேருவின் சோஷலிசக்கருத்துக்களைமட்டும் ஏன்எதிர்க்கிறீர்கள்? மொழிப் பிரச்னையில் மட்டும் அவர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - மற்றதில் வேண்டாமா? - என்ற பெருந்தலைவரின் முழக்கம், ஏழைகளின் சமதர்ம வேட்கையை மேன்மேலும் தீவிரப்படுத்தியது.