பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 தேசியத் தலைவர் காமராஜர் இதே சமதர்ம யாத்திரையைப் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்திலேயும் புதுச்சேரி மாநிலத்திலேயும் துவக்கினார். ஏழை பணக்காரர்கள் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். அதை நிறைவேற்றிட, காங்கிரஸ் தொண்டர்களும் - காங்கிரஸ் கட்சியும், அல்லும் பகலும் போராடிடத் திட்டங்களை விளக்கினார். பெருந்தலைவர்காமராஜ் அவர்கள்! இந்திய மாநிலங்கள் தோறும் ஒரு தமிழன் புரிந்த சமதர்மப் புனிதப் பயணம், மக்களிடையே ஒரு புது உத்வேகத்தைப் புகுத்தியதால் நாடெங்கும் ஒரு பரபரப்புணர்வு வேரோடியது. காங்கிரஸ் கட்சியிலே சோர்வுற்றிருந்த தொண்டர்களுக்கு எல்லாம் ஒரு புது எழுச்சியும் - இளைஞர்களிடையே ஒரு புத்துணர்ச்சிப் புல்லரிப்பும் தோன்றியதால், காங்கிரஸ் கட்சி நாளும் வளர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. நேரு உடல்நிலை டில்லியில் காமராஜர் புவனேஸ்வரம் மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நேரு அவர்கள், திடீரென பாரிச வாயுவால் தாக்கப்பட்டார். அதனால் மாநாட்டு மேடைக்கு வர முடியாமல், அவர் அவசர சிகிச்சைக்காக மீண்டும் டில்லிக்குத் திரும்பிச்சென்றார். ஆனாலும், நேரு அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொள்ளும் சோசலிச சமுதாயக் கோலாகலக் கால்கோள் விழாக் காட்சிகளைக் காண முடியாமல் போய் விட்டதே என்று வேதனைப்பட்டார். 1984-ஆம் ஆண்டு, மே மாதம் 27-ஆம் நாள், தமிழ் நாட்டிலே தலைவர்காமராஜர் அவர்கள் கிராமந்தோறும் சோஷலிசப் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒர்அவசரச்செய்தி அவருக்கு வந்தது. பிரதமர் நேரு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனே காமராஜர் டெல்லி மாநகருக்கு விரைந்தோடினார்! பெருந்தலைவர் ஏறிச்சென்ற விமானம், பெங்களுர்வானூர்தித் திடலை அடைந்தது. அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பாவும், அதுல்யாகோஷ-ம் அதே விமானத்திற்கு வந்து தலைவருடன் டெல்லிக்குச் சென்றார்கள்.