பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 27 Af அனைவருக்கும் அவரே நேரிலே கொண்டு போய் வழங்கினார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்த கருத்துக்கள் - இதோ: படியுங்கள்! "இங்கிலாந்து வாழ் மக்களே! இந்தியாவிலே வாழ்கின்ற எண்ணிக்கையற்ற மக்கள், மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே அறியாமல் வாழ்கின்ற வேதனையான உண்மைகளை நீங்கள் அறிவீர்களா? 'ஏதோ, பிறப்பெடுத்த அவர்கள் இறக்கும் வரை வறுமை, வேலையின்மை, அடக்குமுறை, ஆணவக் கொடுங்கோல் கொடுமைகள் என்ற காரிருளிலே மூழ்கிக் கிடக்கத்தான் வேண்டுமா? “மாறி மாறி வரும் நன்மை தீமை என்ற மாற்று வண்ணங்களால் நெய்யப்பட்ட அவர்களது ஆடைகள் இறந்த பிணங்கள் மேலே போர்த்தப்படும் சவமுக்காட்டுப் போர்வைகளாகவே அவர்களைப் பொறுத்தவரைப் போர்த்தப்பட்டுள்ளன! என்பதை நீங்கள் உணர்வீர்களா? 'நாள்தோறும் உதயமாகி வரும் கதிரவனுடைய எண்ணற்றக் கதிர்களுக்கே கூடத் தெரியாதபடி இருளிலே முடக்கப்பட்டு வாழ்கிறார்களே, இந்தியர்கள் - அவர்களுக்கு வாழ்க்கையிலே நிம்மதியான உய்வு என்பதே கிடையாதா? உழைக்கிறார்கள் அவர்கள் கடுமையாகவே உழைக்கிறார்கள்! விவசாய மாடுகளைப் போலவே உழைக்கிறார்கள்! ஆனால், பயன்? பசி! பசி, பசி பசியென்றே நாள்தோறும் பரதவிகிறார்களே? 'நோய் அவர்களை விநாடிக்கு விநாடி நோகடிக்கின்றன! வேதனைகள் அவர்கள் வாழ்வைச் சோதனைகள் புரிகின்றன. அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளால் அவர்கள் அழுதுகொண்டே வாழ்கிறார்கள்! இந்திய மக்கள், இந்த அவலங்களால் பூட்டப்பட்ட இருட்டுக் கோட்டையிலே அடைக்கப்பட்டுத் திணறுகிறார்கள். திகைக்கிறார்கள்!' திரு.ஹியூம் வெளியிட்ட அந்தத் துண்டறிக்கையில் இந்திய மக்களின் அவலக் கொடுமைகளை இவ்வாறு அழுதுகாட்டி வெளியிட்டிருந்தார். எங்கே? தனது சொந்த நாட்டின் மண்ணிலே! எல்லாரும் இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற வேட்கையாலே! வியப்பாக இல்லையா? திரு. ஹியூம் மறுபடியும் இந்தியா வந்தார். அலகாபாத் நகரிலே 1888-ம் ஆண்டு, மே மாதம் 30-ம் நாளன்று, ஒரு பொதுக் கூட்டத்திலே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின்