பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 399 பிரதமர் நேரு மறைந்தார் நடுவழியிலே விமானம் பறிந்து கொண்டிருக்கும் போதே, மனிதருள்மாணிக்கமான பிரதமர்நேரு மறைந்து விட்ட செய்தியை வானொலிபரப்பியது. அச்செய்தி அம்மூவரையும் அதிரவைத்தது. பெருந்தலைவர்காமராஜருக்கு நாவும் வரவில்லை பேச உடல் வெளியெல்லாம் வியர்த்து, ஏதோ ஒர் அதிர்சசி வந்து தாக்கிய நிலை பெற்றார். விமானத்திலேயே மூவரும் கண்ணிர் விட்டனர்! அதே சோக நிலையிலேயே அவர்கள் டெல் லி போய் ச் சேர்ந்தார்கள். விமானநிலையத்தினுள்ளேகாங்கிரஸ் தலைவர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுள் ஒருவர் ஜி. இராஜகோபாலன்: தலைவரைக் கண்டதும் அவர், கண்ணிர்ததும்பினார்: நேரு என்கின்ற இந்திய சோஷலிசப் பிதாமகன் - சமதர்ம ஜனநாயகத் தளபதி, காலமான உடனே, குல்ஜாரிலால் நந்தா அவர்கள், தற்காலிகப் பிரதமராகப் பதவி ஏற்றார் என்று ராஜகோபாலன் பெருந்தலைவரிடம் சோகக் கண்ணிர் தவழக் கூறினார். காந்திபெருமான் வாரிசான பஞ்சசீலத் தத்துவநாயகன் நேரு அவர்களின் இல் லத்திற்கு மூவரும் விரைந்தார்கள். அங்கே லட்சக்கணக்கான மக்கள் அலைமோதிக் கிடந்தார்கள். அவரவர் இறுதி வணக்கத்தை அப் பெருமகனார் பாதத்திற்குக் காணிக்கையாக்கிட வரிசை வரிசையாகத் திரண்டு, திரள்திரளாகக் கூடி, சோகமே உருவாக நகர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவனி வாழ் தலைவர்களெல்லாம், எல்லாம் அமரராகிவிட்ட நேரு பிரானின் மரணச் செய்தி கேட்டு அந்தந்த நாடுகளில் அனுதாபச் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணமிருந்தன மறுநாள் உதயசூரியன் நேரம் தோன்றும் போது, இந்திய மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள், கட்சிசாரா அறிஞர் பெருமக்கள், தொண்டரணிகள், படைகள் திரண்டன - நேருவின் வீட்டிற்கு! இதற்கிடையில், மேதினி வாழ் அரசியல் அதிகார மேதைகள் எல்லாம், இந்தியாவிற்குள் வந்து குவிந்தார்கள் நேரு அவர்களின் உடலுக்குத் தங்களது இறுதி மரியாதையினையும் - அனுதாபத்தையும் தெரிவித்த வண்ணமிருந்தார்கள் டெல்லி மாநகரமே துன்பத்தில் துடித்தது தத்தளித்தது. தீன்மூர்த்தி பவன், மக்கள் சோகத்திற்கிடையே திணறித்தவித்தது! -