பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 - தேசியத் தலைவர் காமராஜர் இந்திய அரசியலின் முடி சூடா மன்னராகத் திகழ்ந்த நேரு பெருமகனாரின் உடல், விடிய விடிய மக்கள் பார்வையிலே காட்சி தந்தது! பெருந்தலைவர் காமராஜருடன் சூழ்ந்த பிற தலைவர்கள் எல்லாம் பேயறைந்த முகமாக அமர்ந்திருந்தனர். இந்திய மண்ணில் நேருவின் சாம்பல்! ஜோதியின்தங்க நிகர் மேனி எரிநெருப்பு அனலிலே கலந்தது. பாரதத் தாயின் திருமகனான அவர் உயிரோடு இருக்கும்போது எழுதி வைத்திருந்த உயிர்ச் சாசன உயிலின்படி, மனிதருள் மாணிக்கமான நேரு பெருமகனின் சாம்பல், இந்திய மண் முழுவதும் விமானம் வாயிலாகத்துவப்பட்டது! உயிர் உள்ளளவும் பாரதத் தாயின் விடுதலைக்காக உழைத்துழைத்து, பலமுறை சிறையேகிய தியாகச் செம்மலான நேரு என்கின்ற மனிதப் புனிதன், இந்தியத் தாயின் பாதங்களிலே மண்ணானார். இந்திய நாட்டின் காற்றிலே - மண்ணிலே - புகழ் வானிலே - ஊற்றருவிகளின் உண்ணிரிலே இரண்டற இணைந்து, வையத்தின் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர் நேரு தெய்வத்துள் கலந்தார்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். என்பது திருவள்ளுவர் வாக்கு. 裘 ချွိန္နီ 貂 获 ఫ్లో