பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉંટ) இந்தியாவின் மானத்தை இருமுறை காத்த காமரா பண்டித மோதிலால் நேருவின் பரம்பரை வாரிசான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் கி.பி. 1889 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் நாள் பிறந்தார்! ஏறக்குறைய 75 ஆண்டுகள், பாரத மண்ணிலே ஒரு மாமன்னராகப் போல, பிரதமர் குல திலகமாகப் பவனிவந்த நேரு பிரான், 1964ஆம் ஆண்டுமே மாதம் 27-ஆம் நாள்மயான மண்ணை ஆளும் சக்கரவர்த்தியானார்! நேருவின் சகாப்தமும் முடிந்தது! பிரதமராகப் பணியாற்றிய நேரு அவர்களின் மரணம், இந்திய மக்களை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஓர் அதிர்ச்சித் திகைப் போடு உலுக்கிவிட்டது! அரசியல் அறவாளர்கள் அனைவரும் ஆறாத் துயரில் ஆழ்ந்தனர்! நேருவிற்குப் பிறகு - யார்? மனித நேய அருட்பெருஞ் சோதியான அண்ணல் காந்தி பெருமான் அவர்களால், எனக்குப் பின் ஜவஹர்லால் நேருதான் எனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட மனிதருள் மாணிக்கமான நேரு பெருமனார், மறைந்த மனித தெய்வமான காந்தியடிகளின் அரிய இடத்தை ஓரளவு நிரப்பினார்! ஆனால், நேருவுக்குப் பிறகு யார்? இந்தக் கேள்வி, மேதினியிலே ஓர் எதிர் பார்ப்புகளை விளைவித்தது! உலகத்தில் என்ன? இந்தியாவையே குழப்பத்திற்குள்ளாக்கியது! அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பதவிபிடிச்சண்டைகளும் அவர்களுக்குள்ளே அணிகளாய், அராஜகங்களும் - கலவரங்களும் - குழப்பங்களும் - காழ்ப்புக்களங்களுமாகிச்செல்வாக்கிழந்து வந்தார்கள் காங்கிரஸ் கட்சியின் பெயருக்கும் களங்கத்தை விளைவித்தார்கள்.