பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 தேசியத் தலைவர் காமராஜர் அதனால், இந்திய ஜனநாயகமே நிலைகுலைந்து, ராணுவ ஆட்சிதான் உருவாகும் என்ற அச்சம், எல்லா நாடுகளிலும் ஓர் அரசியல் அதிர்ச்சியை விளைவித்தது. இத்தருணத்தில், காங்கிரஸ்தலைவர்கள் சிலர் இடையே, பெரும் பொறுப்புகளும்-கடமைகளும்-நாட்டுணர்ச்சிப் பாசங்களும் அலை மோதின; அதனால் ஒவ்வொரு மாநிலக் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் ஒவ்வொரு கோணத்திலும் சிந்திக்கும் நிதானம் உருவாயிற்று. காமராஜரின் செயற்கரிய செயல்: அந்தச் சிந்தனைகளை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப் பெருந்தலைவர் காமராஜ் தனித் தனியாகச்சந்தித்துக் கலந்தாலோசித்தார். தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 540 பேர்களும், 15 மாநில முதலமைச்சர்களும், ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் ஒன்று கூடி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முடிவைத் காமராஜரிடமே ஒப்படைத்தார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க இந்த முடிவிலே பெருந்தலைவர் அவர்கள் ஈடுபட்டு, அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களோடு கலந்துரையாடினார். யார் யார் பிரதமர்பதவிக்குப் போட்டி போடுவார்கள் என்பதைக் காமராஜர்சிந்தித்தார். முதன்முதலாக மொரார்ஜி தேசாய் அவர்களைச் சந்தித்துப் பேசினார்; மாளவியா அவர்களைத் தனியே கண்டு உரையாடினார். காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட வேண்டும்! முடியுமா? - என்று, காமராஜ் அவர்கள் கேட்டதும், நாட்டின் மானம்தான் பெரியது - பதவிப் போட்டியல்ல என்று தேசாயும், மாளவியாவும் கூறிய உணர்வை மதித்து ஏற்றுப் பிறகு தாம் மேற்கொண்டபணிகளிலேதலைவர்காமராஜ்தீவிரமாய் ஈடுபட்டார். எல்லா மாநிலக் காங்கிரஸ் முதலமைச்சர்கள் கூட்டம் கூடியது. அதற்குப் பெருந்தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். பிரதமர் தேர்தல் மூலம் நாட்டின் ஒற்றுமையை உருவாக்கிடத் தலைவர் காமராஜ் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.