பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4.03 அடுத்த பிரதமர் #ưIIử GTử UIQ ? அடுத்த பிரதமர்மொரார்ஜி தேசாயா; லால்பகதூர்சாஸ்திரியா? என்ற வினா நாட்டிலே எழுந்தது. நாட்டின் பத்திரிகைகளும் அதே கேள்வியை எழுப்பின. இந்திய பிரதமர் பதவிக்குரிய போட்டிகளைத் தவிர்க்க வேண்டும். ஒரு மனதாகவே பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தலைவர் காமராஜ் அரும்பாடுபட்டுப் பணியாற்றினார். இலால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே போட்டி இல்லை என்பதைக் காமராஜ் அவர்கள் இறுதி நேரத்திலே உணர்ந்தார். எனவே, அவரையே பிரதமராகத் தேர்தெடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார் காமராஜர் இந்த இறுதிமுடிவைத் மொரார்ஜி தேசாய் அவர்களுக்கும் தலைவர் தெரிவித்தார். அதற்குப் பின்பு மொரார்ஜி தேசாய் பத்திரிகை நிருபர்களிடையே பேசும்போது, “சாஸ்திரியே பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது' என்று தேசாய் வாயாலேயே காமராஜர் அறிவிக்கச் செய்தார். காமராஜ் பேசுகிறார்: 1964 - ஆம் ஆண்டு ஜூன்மாதம் 2-ஆம் நாள், நாடாளுமன்றக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மற்ற மாநில முதல் மந்திரிகளும், காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் அதே கூட்டத்தில் பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்தார்கள். பத்திரிகைநிருபர்களும், அயல்நாட்டுத்துதுவர்களும், வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும், மாநிலக் காங்கிரஸ் தலைவர்களும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்வையாளர் பகுதிகளிலே குவிந்திருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜர் அந்த அவையிலே பேசியபோது, “நாமெல்லாம் போற்றிப் பாராட்டி வந்த காந்தியடிகள் வாரிசு, நேருஜி அவர்கள் மறைவுக்குப் பின்பு கூடியுள்ளோம். நமக்குள்ளே கடமையை நிறைவேற்றக் கூட்டுத் தலைமையும் - கூட்டுப் பொறுப்பும் ஒருமனதான முடிவும் தேவைப்படுகிறது." 'நேருஜி என்ற குடையின் கீழ் இது வரை பணியாற்றினோம். அவர் சிந்தனையும் - செயலுழைப்பும் நமக்குக் கிடைத்தது. நாம் என்ன செய்தாலும் அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது. மக்கள் நம்மை மன்னித்தார்கள். அந்த நிலை இனி இல்லை.