பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 தேசியத் தலைவர் காமராஜர் ஆகவே, எதிர்காலத்தில் நாம் எல்லோரும் மிகவும் கவனத்துடனும் - எச்சரிக்கையுடனும் பணிபுரிய வேண்டும் ' என்ற வேண்டுகோளை விடுத்தார். இந்தியாவின் இரண்டாவது பிரதமர் உடனே, தற்காலிகப் பிரதமராக இருந்த குல்ஜாரிலால் நந்தா அவர்கள், நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராக லால்பகதூர்சாஸ்திரியின் பெயரை முன்மொழிந்தார். மொரார்ஜி தேசாய் அதை வழி மொழிந்தார். பின்னர் ஒரு மனதாக, லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், இந்திய நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். உடனே, பெருத்த கையொலிகள் எழுந்தன. அந்த ஒசை அடங்கிட சில நிமிடங்கள் ஆயின! லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், பாரதப் பிரதமர் ஆனார்! மொரார்ஜி தேசாய், எஸ்.கே. பாட்டில், ஜெகஜீவன்ராம், வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் பிரதமர் சாஸ்திரியைப் பாராட்டியும் . வாழ்த்தியும் - பேசினார்கள். இந்தியாவின் இரண்டாவது பிரதமரைப் பெருந்தலைவர்காமராஜர்தான் இந்திய மக்களுக்குத் தேர்ந்தெடுத்து அரும்பணியாற்றி நமக்கு அவரை வழங்கினார்: தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக நடமாடியவரும் - அகில இந்திய தேசியக்காங்கிரஸ் கட்சியினிலே காலாகாந்தி என்று அழைக்கப்பட்டவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், பிரதமர் பதவிக்கு எந்தவிதப் போட்டியோ, கலவரமோ, குழப்பமோ இல்லாமல், எல்லாரும் ஒரு மனதாக விரும்பிய வண்ணம் செயலாற்றி இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி, இரண்டாவது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை நாட்டிற்குக் கொடையாகக் கொடுத்தார். இந்த அரும்பெரும் உழைப்பால், இந்திய ஜனநாயகத்தை உலக அரங்கிலே பெரும் புகழோடு, காமராஜர் அவர்கள் நிலைநாட்டினார். சாஸ்திரி தியாகம்! பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் போலவே, சிறு வயதில் தனது தந்தையை இழந்தவர். ஈன்றெடுத்த தாயாருடன் வறுமை வேக்காட்டில்