பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 தேசியத் தலைவர் காமராஜர் தமிழகத்தில் ஏற்பட்ட அரியலூர் ரயில் விபத்தில் 144 பேர்பயணிகள் இறந்தார்கள். அதற்குப் பொறுப்பேற்று 1956-ஆம் ஆண்டில்சாஸ்திரி அவர்கள் தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்! 1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். மத்திய அமைச்சரவையில், பிரதமர் நேரு தைைமயின் கீழ் மீண்டும் தொழில் அமைச்சரானவர். கோவிந்த வல்லப பந்த் அவர்கள் மரணமடைந்ததால், மீண்டும் அவர் மத்திய அரசு உள்துறை அமைச்சரானார். காமராஜ் அவர்களது கே. பிளான் திட்டம் வந்தவுடன், தனது அமைச்சர் பதவியையும் விட்டு விலகியவர். பிரதமர் நேரு அவர்கள் உடல் நலமற்றிருந்தபோது, அவரால் இலாகா இல்லாத மத்திய மந்திரியாக்கப்பட்டார் - சாஸ்திரி. 1964 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நேரு பெருமகனார் இறந்ததும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் இந்திய நாட்டிற்குப் பிரதமராகப் பதவி ஏற்றவர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். பிரதமர் பதவிக்கு காமராஜ் வியூகம் எத்தகைய ஒரு தியாக சீலர், தன்னலமற்றவர், மக்கட் தொண்டு மாண்பாளர், பொது வாழ் வுக்கு இலக்கணம் வகுப்பவர், பிரதமர் பதவிக்கு வரவேண்டுமென்று பெருந்தலைவர்காமராஜர் விரும்பினாரோ, அத்தகைய ஒரு தேச பக்தரைத் தேடிக் கண்டு பிடித்து, ஒருமனதாக அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்து நமக்குத் தந்தவர் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள். நான்கு பேருக்கு ஆனது நமக்கும் ஆகட்டுமே என்ற ஏனோ தானோ நடுநிலைப் பொறுப்பிலே காமராஜர் நில்லாமல், தன்னைப் போலவே ஒரு தன்னிகரற்ற தலைவரை, ஏழை பங்காளரின் தோழரை, எளிமையான வாழ்வு வாழ்பவரையே, அவர் பாரத பிரதமராக்கிட அரும்பாடு பட்டார் என்றால் - அது தேசபக்தியின் சிகரத்தில் நிறுத்தும் செயலல்லவா! லால் பகதூர்சாஸ்திரி அவர்கள், பெருந்தலைவர்காமராஜரைக் கலந்துரையாடி பிற மத்திய அமைச்சர்களை நியமித்தார். அந்த மந்திரி சபையில் மொரார்ஜி தேசாய் அமைச்சராகச் சேர மறுத்து விட்டார். காரணம், மத்திய நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித்