பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 407 தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காமராஜர் அவர்கள் சந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் காமராஜ் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்த ஒருமித்த முடிவுக்கு எதிர்ப்பு எழுப்பினார் மொரார்ஜி தேசாய். கட்சி ஜனநாயகம் அழிக்கப்படுவதாக அவர் ஆத்திரப்பட்டார். 'பிரதமரைத் தேர்வு புரியும் உரிமை தனி ஒரு தலைவரிடம் ஒப்படைப்பது தகாது. உறுப் பினர்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த உரிமையைப் பறிக்க மூத்த தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை’ என்றார் தேசாய்! தலைவர் காமராஜ் அவர்கள், மொரார்ஜி தேசாயுடன் மோதி பிரச்னையைப் பெரிதாக்க விரும்பாமல், மூத்த தலைவர்கள் ஆலோசனையின் படியும் நேருவுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு ஏற்பவும் நடந்து - லால் பகதூரை மத்திய அமைச்சகக் குழுத் தலைவராக்கினார். காமராஜர் சேவை நம்பிக்கை! பிரதமராக இருந்த பண்டித நேரு அவர்கள் இறந்த அதிர்ச்சி நாடெங்கும் ஆழ்ந்திருந்த சோக இருளைப் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தொண்டுகள், காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய வளர்ச்சிப் பணிகள், முதியவர்கள் ஆட்சியை விட்டு விலகி, இளைஞர்களுக்கு வழியமைத்துக் கொடுத்த அவரது சீரிய சேவைகள், இவை எல்லாம் இந்திய மக்களிடையே காங்கிரஸ் கட்சி இனிமேல் கலகலத்துப் போகாது என்ற நம்பிக்கையை நாட்டில் நாட்டியது. அவருடைய அறிவுக் கூர்மையால், சிந்தனை வளத்தால், அல்லும் பகலும் அயராது ஒயாது உழைத்த உழைப்பால், காமராஜ் அவர்கள் பெருந்தலைவர் பதவிக்குரிய தனது புகழை மேலும் வளர்த்துக் கொண்டார். காமராஜ் அவர்களால் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்குரிய நற்பெயர் நாளும் வளர்ந்தது. அந்தப் புகழால், தலைவர் காமராஜ் வளர்ந்தார். காங்கிரஸ்தான் காமராஜர் காமராஜர்தான் காங்கிரஸ் என்ற வானளவு உயர்நிலை வளர்ந்தது.