பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தேசியத் தலைவர் காமராஜர் குறிக்கோள்களைப் பகிரங்கமாக முழக்கமிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியிலே நடைபெறும் கேடுபாடுகள் இந்திய மக்களுக்கு எவ்வாறெல்லாம் ஊறுதுாறுகளாக உறுத்துகின்றன என்பதை அவர் ஊர்கள்தோறும் பிரசாரம் செய்தார். வடமேற்கு மாகாணம் என்று அன்று இருந்த நிலப் பகுதிக்கு ஆளுநராக அன்று லெப்டினண்ட் சர்ஒளக் லண்ட் கால்வின் என்பவர் இருந்தார். திரு ஹியூம் அவர்களின் ஆங்கில எதிர்ப்புச் சொற்பொழிவுகள், இந்தியர்களுக்கு ஆதரவாக அவர் முழக்கமிட்ட உரைவீச்சுகள் எல்லாம் அந்த ஆளுநர் கவனத்திற்குச் சென்றன. உடனே அவர் இருபது பக்கங்கள் கொண்ட நீண்டதோர்கடிதம் ஹியூமுக்கு எழுதி; அவருக்கு ஏற்படப் போகும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி அவரை எச்சரித்தார்; ஜி.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதிய காங்கிரஸ் வினா - விடை என்ற புத்தகத்தைப் பற்றியும் அவர் கண்டனம் செய்தார். ஆளுநரால் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திற்கும் கடுமையான விளக்கங்களை; திரு ஹியூம் எதிர்ப்புரைகளாக 72 பக்கங்கள் எழுதி அனுப்பினார்: தாயகம் சென்ற ஹியூம் மரணம் அரிய இத்தகைய செயற்பாடுகளை ஆற்றிய திரு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் அவர்கள் 1894-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே, அவர் பதினைந்தாண்டு காலம் உழைத்து, 20,000 பவுன் செலவில் ஒரு பறவை இயல் நூலகமும், பறவைக் காட்சி சாலையும் அமைத்தார். "STRA FEATHERS'என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார்! இப்படிப்பட்ட அரிய மேதையின் இறுதிக்காலம் இருண்ட காலமாகவே அமைந்தது. திரு ஆலன் அக்டேவியன் ஹியூம் என்ற கர்ம வீரன், 1912- ஆம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் காலமானார். இந்த வேதனையான சம்பவத்தைக் கேட்ட அகில இந்திய தேசியக் காங்கிரஸ் ஆர்.என். முடோகர் தலைமையில் கூடிய அம்ரோட்டி நகர்மகாசபையிலே இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றித் தனது வருத்தத்தைக் காணிக்கையாக்கிக் கொண்டது. 'திரு ஹியூம் ஒவ்வொரு செயலாலும் - வார்த்தையாலும் இந்திய முன்னேற்றத்திற்காக உழைத்த ஓர் மகரிஷியாவார்' என்ற பாராட்டுதல்களை அவருக்கு காங்கிரஸ் மகாசபை வழங்கிச் சிறப்பித்தது!