பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4.09 போர் முனையில் காமராஜர்! மாநாடு முடிந்த பின்பு, இந்தியா-பாகிஸ்தான் போர்முனைப் பகுதிகளை எல்லாம் காமராஜர் பார்வையிட்டார். நாட்டிற்காக உழைக்கும் ராணுவ வீரர்களைப் பாராட்டிப் பேசிக் களியூட்டினார் தலைவர் 1965-ஆம் ஆண்டு, சென்னைமாநகரில் நடைபெற்ற போர் நிதிக் கூட்டத்திற்குப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை அழைத்துக் கொண்டு தலைவர் காமராஜர் தமிழகம் வந்தார். போர்நிதியளிப்புக் கூட்டம் முடிந்த பின்பு, சென்னையிலே உள்ள ஆபட்ஸ் பரிமாளிகையில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடந்தது. பிரதமர்லால்பகதூர்.அந்தக்கூட்டத்தில் பேசும்போது, "போர்க் களத்தில் நமது ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், மத்திய அரசு எடுத்த அரும் பணிகள்தான்! அந்த நடவடிக்கைகளை எடுக்கத் தலைவர் காமராஜர் கூறிய ராஜதந்திர யோசனைகள்தான் என்று காமராஜரைப் பாராட்டினார் சாஸ்திரி! இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு பிரதமர் சாஸ்திரி மிண்டும் சென்னை மாநகர் வந்தார். சென்னை ஆளுநரின் இராஜ்பவனில், நிருபர் கூட்டம் நடை பெற்றபோது, ஒரு நிருபர் பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி அவர்களை நோக்கி, ஒரு வினாவை எழுப்பினார். "தற்போதைய ஒப்பந்தத்தை இன்றைய இலங்கை ஆட்சியிடம் செய்து கொண்டீர்கள். அடுத்து வேறு ஒர் ஆட்சி அங்கு வந்தால், இந்த ஒப்பந்தத்தை அந்த ஆட்சி மதித்து நிறைவேற்றுமா? என்று அந்த நிருபர் கேள்வியைத் தொடுத்தார். நிருபர் வினாவிற்கு விடையளிக்கப் பிரதமர் சாஸ்திரி சற்றுத் தயங்கினார். உடனே, அருகே அமர்ந்திருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தமது பதிலைக் கூறினார். "Don't go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic governments. Just as our Democratic government in India would honour this agreement, we expect any succesor government in Ceylon to honour this agreement." உடனே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், அந்த #65L fil 15, "I agree with Kamaraj"stairpitif lo&g #8Aujl girl