பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.10 தேசியத் தலைவர் காமராஜர் உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி, வெளிநாட்டுப் பிரச்னைகளிலும் தலைவர்காமராஜ் அவர்களின் அரசியல் ஞானம் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் இருந்தது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா? காமராஜர் அவர்களின் இந்த மதிநுட்பப் பேச்சை எப்போதும்நாம் மறக்க முடியாது அல்லவா? இத்தகைய ஒர் அரசியல் ராஜ தந்திரியை, அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்று சிலர் கேலி பேசினார்கள் கூட்டங்கள் தோறும் தமிழக எதிர்க்கட்சிகளும் அவரைக் கிண்டல் செய்தன: இத்தகைய திறனுடைய, சிறந்த ஆங்கில சிந்தனையுடைய, இலக்கணம் வழுவா ஒரு மதியூகியை ஆங்கிலம் அறியாதவர் என்பதை, நாம் கூறுவதைவிட பத்திரிகைகள் அதன் நிருபர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். காமராஜர் எனது வழிகாட்டி! "நான்பிரதமராவதுவதற்கு மட்டுமன்று; எனக்கு வழிகாட்டியா கவும் காமராஜர் விளங்குகிறார்.” போர்முனையில் எதிரிப்படைகள் பின்வாங்கி, நமது படைகள் முன்னேற, தலைவர் காமராஜர் அவர்கள் பாகிஸ்தான் - இந்திய போர் முனைப் பகுதிகளைச் சென்று பார்த்ததால் ஏற்பட்ட பயன்களேயாகும். எனவே பெருந்தலைவர்காமராஜ் எனது உடன் பிறவா சகோதரராக இருக்கிறார்' என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பேசியபோது, தமிழக மக்கள் காமராஜருடைய தேசத் தொண்டுகளை எண்ணி மேலும் பெருமிதமடைந்தார்கள். இந்தி எதிர்ப்பு போர் முரசு! இந்தக் காலகட்ட அரசியல் சூழ்நிலையில், 1965-ஆம் ஆண்டு ஜனவரி25-ஆம் நாள், தமிழக மாணவர்களது இந்தி எதிர்ப்புக்குழு, இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போர் முரசு கொட்டியது! ஜனவரி - 26-ஆம் நாள் திராவிட முன்னேற்றக்கழகம், இந்தியக் குடியரசு நாளை துக்கநாளாக அறிவித்து, தனது இந்தி எதிர்ப்புணர்ச்சியை எதிரொலித்தது. சென்னை மாநகரின்சர்வகட்சிக் குழு மாணவர்கள், அப்போதைய முதலமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளைக் கொண்ட மனுவை அளிக்கக் கோட்டையை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள்.