பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 41% முதல் வர் எம். பக்தவத்சலம் அவர்கள், இந்தி எதிர்ப்பு மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டதால், மாணவர்கள் போராட்டம் உருவாகி, போலீஸ் தடியடிகள், கண்ணிர்ப் புகைப் பிரயோகங்கள், துப் பாக்கி வேட்டுகள், இராணுவப் படைக்குவிப்புகள் என்ற அளவிற்கு வளர்ந்து, பிறகு அது பொதுமக்கள் போராட்டமாக மாறிவிட்டது. நூற்றுக் கணக்கான மக்கள் துப் பாக்கித் தர்பாரால் பிணமானார்கள், காவல்துறையில் சிலர் எரிக்கப்பட்டார்கள் என்ற நிலைக்கு கோரமான போராட்டக்களமாக உருவெடுத்தது தமிழ்நாடு! இந்தோனேஷியப் புத்த சாமியார்கள் தங்களது மதப் போராட்டத்திற்காக உயிரோடு தீக்குளித்துத் தியாகம் புரிந்தது போல, தமிழகத்திலே பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்தும் - நஞ்சுண்டும் உயிர்த் தியாகம் செய்தார்கள் சுருக்கமாகக் கூறுவதானால், உலகில் அன்று வரை அவனது தாய்மொழிக்காக எந்த நாடும் அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தைச் செய்ததாக வரலாறு இல்லையெனும் நிலைக்கு தமிழகம் கொந்தளித்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் அப்போது தமிழக முதல்வராக இருந்திருந்தால், மொழிப் பிரச்னை இத்தகைய ஒர் எரிமலை வெடிப்பாக மாறி, அக்னிக் குழம்புகளை அள்ளி வீசும் எரியோட்ட வெள்ளமாக உருவெடுக்க வழி செய்திருக்க மாட்டார்.