பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் முதலமைச்சராக பக்தவத்சலம் இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போர், அவரது ஆட்சியில் இந்திய வரலாற்றின் கறைபடிந்த சுவடுகளாகப் பதிந்து விட்டன. தமிழகம், அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, இப்படிப்பட்ட தீக்குளிப்புக்களை, மொழிப் போர்ப்பிணங்களை, மொழிக்காகப் பயன்படுத்துதப்பட்ட துப்பாக்கிப்போர் துந்துபிகளை, ஏறுக்குறைய பதினெட்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்குகளே இயங்காத நிலைகளை - தமிழ்நாட்டு வரலாறும் சரி, இந்திய வரலாறும் சரி, மொழித் தியாகத்திற்காக அன்றுவரை கண்டதே இல்லை. இந்த நிலையை ஒழுங்குபடுத்தி, காங்கிரசுக்கு ஏற்படுத்தப்பட்ட அந்தக் களங்கக்கறையைக் கழுவித்துடைத்திட பெருந்தலைவர்காமராஜர் மீண்டும் தமிழக அரசியலிலே ஈடுபடவேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் - 1967 - ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மிக முக்கியமான ஒர் அரசியல் சவாலாக அமைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மனங்களிலே, பக்தவத்சலம் ஆட்சியின் இரும்புக்கரம் அடக்குமுறைகள்,துப்பாக்கிச்சூடுகளால் விழுந்த பிணங்களின் ரணகளங்கள், வயிறார மக்களுக்கு உணவும், அரிசியும் வழங்க முடியாத ஆறவுன்ஸ் அரிசிக் காட்சிகள், மக்களிடையே மனப்பாடங்களாகப் பதிந்துவிட்டன. இவற்றைச் சமாளித்துத் தேர்தல் நடத்தும் பொறுப்பு நிலை, பெருந்தலைவர் காமராசருக்குத் தலைச்சுமைபோன்ற பெரும்பாரமாகிவிட்டது! இந்த அரசியல் பலவீனங்களால் தமிழ் நாடு முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைகள் எழும்பி மோதிக்கொண்டிருந்தன! எதிர்க் கட்சிகளின் ஒட்டுக்களை தி.மு.க.கழகம் சிதறவிடாமல் கூட்டணி அமைத்துக் கொண்டு காமராஜர் சக்தியிடம், அதாவது காங்கிரஸ் கட்சியிடம் மோதியது.