பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 44 3 தி.மு.க. கூட்டணியில், ராஜாஜியின் சுதந்திரா, காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், நாம் - தமிழர் இயக்கம், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், பிரஜாசோஷலிஸ்ட் ஆகிய கட்சிகள்எல்லாம் இணைந்தன. தேர்தல் நெருங்கிக்கொண்டேவரும்போது, நடிகவேள்எம்.ஆர்.ராதா, புரட்சி நடிகர்எம்.ஜி.ராமச்சந்திரனைத்துப்பாக்கியால்சுட்டுவிட்டசம்பவம் தி.மு.கழகத்துக்கு வாக்கு சேர்க்கும் ஒரு பெரும்பலமாக அமைந்துவிட்டது. இவ்வளவு சக்திகளும் ஒன்று கூடி யாரை எதிர்த்தன தெரியுமா? காமராஜரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை அன்று: பக்தவத்சலம் துப்பாக்கி வேட்டுப் பினங்களாலும், ஆறவுன்ஸ் அரிசிகொடுத்துச்செயற்கைஅரிசிப்பஞ்சத்தை உருவாக்கியதாலும், காங்கிரஸ் ஆட்சி, பலவீனப்படுத்தப்பட்டு, பக்தவத்சலம் பொறுப்பிலே இருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதற்காக உருவான எதிர்க்கட்சிக் கூட்டணி சக்தி அது! பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்திட, நேரு பெருமகனுக்கு நேர்ந்துள்ள கட்சி நெருக்கடியிலே இருந்து அவரைக் காப்பாற்றிட, அவர் டில்லிக்குச் சென்று விட்டதற்குப் பிறகு வளர்க்கப்பட்ட, தமிழகப் பக்தவத்சலம் காங்கிரசை எதிர்த்திட உருவான தேர்தல் எதிர்க்கட்சி தி.மு.க. கூட்டணி அது. அத்தகைய ஒர் அரசியல் நெருக்கடியான காலம் 1967 - பொதுத் தேர்தல் வந்த நேரம். எனவே பெருந்தலைவர் சொட்டை சோடையான காரணங்களைக் கூறாமல், வீர உணர்ச்சியோடு இருக்கும் தனது காங்கிரஸ் ஜனநாயகப் போர்ப்படைகளைத் திரட்டிக் கொண்டு, தேர்தல் வியூகங்களை வகுத்து, 1967களத்தினை குருக்ஷேத்திரம் என்று எண்ணி அவர் பாரத தேர்தல் போரைத் தொடுத்தார்: இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பலத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் இறுதிக் கூட்டம் மெரினா கடற்கரையிலே நடந்தது. அக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றிய மூதறிஞர் ராஜாஜி, தனது இன மக்களிடம் ஒட்டுக் கேட்டபோது, காங்கிரஸ்கட்சி எனும் விஷ விருட்சத்தைத்தமிழ்நாட்டில் வேரோடு வீழ்த்திட, வேரடி மண்ணோடு பெயர்த்தெறிய, பிராமணர்கள் தங்களது ஒட்டுக்களை, தி.மு.க. கூட்டணிக்கே போடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.