பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414. தேசியத் தலைவர் காமராஜர் 'திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் போடச் சொல்கிறேன் என்று தயக்கமடைய வேண்டாம். பொதுமக்கள் எதிரி காங்கிரஸ் ஆட்சி. அதை ஒழித்துக்கட்டவேண்டியது நமது கடைசிக் கடமை. அதனால், பூணுரலைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பிராமணர்கள் தங்களுடைய ஒட்டுக்களைப் போடுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று மூதறிஞர் ராஜாஜி பிராமண மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பெருந்தலைவர்காமராஜின்அரசியல் பலத்தை அழித்தொழிக்கும் இறுதிக் கடமையாக இந்த வேண்டுகோளை, அவர் தனது இன மக்களுக்கு அடையாளம் காடடினார்! அந்த மக்களும் அவரது கோரிக்கையின்ஆழத்தைப் புரிந்து கொண்டு, தி.மு.க. கூட்டணிக்கே தங்களது வாக்குகளைக்குவித்து, தி.மு.க. அணிக்கே வாக்களித்தார்கள் என்பது வரலாற்று வஞ்சகமாக விளங்கியது. நடைபெற்ற 1967தேர்தலில், 233 சட்டமன்றத் தொகுதிகளிலே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 173 இடங்களில் மட்டுமே களம் கண்ட தி.மு.கழகம் 138 இடங்களிலே வாகைசூடி, தமிழக ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. தேர்தல் புலி, கிங் மேக்கர், என்றெல்லாம் புகழப்படும் பெருந்தலைவர் காமராஜர், தனது பிறந்த மண்ணான விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்றவர், ஒருகல்லூரி மாணவர்மட்டுமன்று, பக்தவத்சலம் இரும்புக் கரத்தால் அடக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போர் மாணவர் தளபதிகளிலே ஒருவரான பெ. சீனிவாசன் என்பவர் ஆவார். அவர், பெருந்தலைவர்காமராஜரைத் தேர்தல்களத்தின் வெற்றி வாய்ப்பைத் தடுத்துவிட்டார். அது மட்டுமே காரணமன்று, பெருந்தலைவரின் உட்கட்சித் துரோகிகள் சிலர், அவரை ஒரு ஜீப் கார் விபத்துக்குள்ளாக்கி விட்டார்கள். அதனால் அவரது கால் எலும்பு முறிந்து, தேர்தல் வேலைகளைச்செய்ய முடியாமல்படுத்த படுக்கையோடு இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப,பக்தவத்சலம் வளர்த்தகாங்கிரசுக்கு இடிமேல் இடி வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.