பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4.15 می 1967-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் எல்லாரும் தோற்றார்கள் - பூவழகன் என்ற ஒர் அமைச்சரைத் தவிர: தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றதைப் பெருந்தலைவர் காமராஜர் மனமார வரவேற்றார். ஜனநாயக நாட்டில் மக்கள் வழங்கிய தேர்தல் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்று தி.மு.க. ஆட்சியமைப்பதை வாழ்த்தினார். அத்துடன் நிற்காமல், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். 'ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் ஆள்வதற்குப் புதியவர்கள். ஒர் ஆறுமாதம் அவர்களுக்கு அவகாசம் தரவேண்டும். அவர்களைப் பற்றி ஏதும் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த ஆறுமாதக் காலத்திற்குள் அவர்களது ஆட்சி எப்படி நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்கிறது என்று பார்ப்போம்! காங்கிரஸ் தொண்டர்கள் வாயைத் திறக்கவேண்டாம் போகப் போக அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்பதுதான் அரசியல் தருமம் ஜனநாயகத்துக்கும் பெருமை. ' என்று காங்கிரஸ் தொண்டர்களைப் பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக் கொண்டார். அறிஞர்.அண்ணா.அமைச்சர்அவையில் யார்யாரைச் சேர்க்கலாம் என்ற கருத்துரையாடல் அவர்களிடையே நடந்தது. ஏ.கோவிந்தசாமிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சராபாளையம் மாரியப்பன் துது போனார்.அண்ணாவிடம் கலைஞர்காலத்திலே அமைச்சராக இருந்த என்.வி. நடராசன், மனைவி புவனேஸ்வரிஅம்மாளை துது அனுப்பி மந்திரி பதவி கேட்டார் மறுமுறை அமைச்சர் அவை விரிவுபடுத்தும் போது அதைக் கவனிக்கலாம் என்று அண்ணா அவர்கள் கூறியதற்காக, அந்த அம்மையார் அண்ணாவுக்குச் சாபம் கொடுத்து விட்டுச் சென்றார். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் ஒன்பது பேர்கள்தான் அமைச்சராக இருந்தார்கள். இந்தநிலையில் விருதுநகர்தொகுதியிலே பெருந்தலைவர்காமராஜரைத் தோற்கடித்த இந்தி எதிர்ப்பு மாணவர் தலைவர்களிலே ஒருவரான விருதுநகர் பெ. சீனிவாசன், தனது மற்ற மாணவர்களுடன் சென்று, அண்ணா, எனக்கு மந்திரியாகும் தகுதி இல்லையா?” என்று, பயந்தும், பணிவாகவும், கனிந்த குரலிலும் அண்ணாவைக் கேட்டார். -