பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? 6 தேசியத் தலைவர் காமராஜர் அதற்குப் பேரறிஞர் அண்ணா அவருக்குப் பதில் கூறியபோது, "Sreenivasan, you have all the Qualifications to be come a minister. But, in any view, you have a dis qualification; that is you are defeated Mr. Kamaraj. I am not ready to celebrate a great leader's defeat. If I do so, History will curse." arcărps (55uil?ll Tii. 'சீனிவாசன், நீ அமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதிகளும் உனக்கு இருக்கிறது. ஆனால், எனது நோக்கத்தின்படி நீ ஒரு தகுதியின்மையினையும் பெற்றிருக்கிறாய். காமராஜர் என்ற ஒரு பெரிய தலைவரை நீ தோற்கடித்திருப்பதுதான் அத்தகுதியின்மை. ஒரு மாபெரும் தலைவரின் தோல்வியை நான் விழாவாகக் கொண்டாட விரும்பவில்லை. நான் அப்படிச் செய்தால் சரித்திரம் என்னைச் சபிக்கும்.’’ என்று கூறினார். அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் மேல் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதற்கு வேறு என்ன சான்று இதை விட வேண்டும்? இத்தகைய ஒர் அரிய பண்பாட்டு நிகழ்ச்சி வேறு எங்காவது நடந்துள்ளதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய சம்பவமாக இது உள்ளது. இந்த இடத்திலே மட்டுமன்றி இதோ மற்றுமோர் சம்பவம். காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, குடியேற்றம் சட்ட மன்றத் தொகுதியிலே போட்டியிட்டார். மற்ற கட்சிகள் அவரை எதிர்த்ததோடு, வேட்பாளர்களையும் நிறுத்தின. அப்போது தி.மு.கழகம், விறுவிறுப்பாகவும், வேகமாகவும், பலமாகவும் வளர்ந்து கொண்டு வந்த கட்சியாக இருந்தது. காமராஜரை அப்போதே எதிர்த்திருக்கலாம் காரணம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிக்கப்பட்ட ஒரே தகுதியைத்தான் அவர் பெற்றிருந்தார்! எனவே, அண்ணா நினைத்திருந்தால் அவரை, அப்போது எதிர்த்திருக்க முடியும். செய்தாரா அண்ணா? இல்லை; மாறாகத் தனது 'திராவிட நாடு' பத்திரிகையில் காமராஜரைப் பற்றிப் பாராட்டி எழுதியபோது, 'குணாளா, குலக்கொழுந்தே என்று போற்றினார். காமராஜர் ஓர் எழுதப்படாத நோட்டுப்புத்தகம்’ என்றார். எனவே, அமைச்சரவை அமைத்த நேரத்தில் சீனிவாசன் மந்திரிப் பதவி கேட்டபோது மட்டும்தான் காமராஜரை மதித்துப் பாராட்டினார் என்பதில்லை. காமராஜர் சாதாரண ஒரு கட்சித் தலைவராக இருந்தபோதும் அவரை மதித்துப் பாராட்டி மகிழ்ந்த மனிதாபிமானமுள்ளவர் என்பதனை, உலகுக்கு உணர்த்தினார்: