பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 41 7 அண்ணா, அமைச்சரவை அமைந்தபோது, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, சென்னைத் தீவுத் திடலிலே தமிழ்நாட்டு அரசு மிகக் கோலாகலமாக நடத்தியது. பல லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலே கூடி, தங்களது தாய்மொழி பற்றின சிறப்பைப் பெருமையாக உலகுக்குத் தெரியப்படுத்தினார்கள். அதே போல உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் எல்லாரும் வருகை தந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்! அந்த உலகத் தமிழ் மாநாட்டைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகீர் உசேன் ஆவார். அந்த மாநாட்டிற்குத் திரைகடல் தாண்டி வாழ்ந்திருந்த தமிழ் நாட்டுக்குத் திரண்டு வந்த தமிழ்ப் பெரு மக்களையும், தமிழ் படித்த உலகத் தமிழ்மேதைகளையும், கட்சி சார்பற்ற தமிழ்நாட்டின் பல லட்சம் மக்களையும் வருக வருக என்று வரவேற்றுத் தமிழ் முரசம் கொட்டியவர் யார் தெரியுமா? தமிழ் நாட்டின் தனிப் பெருந்தலைவர் காமராஜர்தான், எனும்போது இன்பத் தேன்வந்து பாயுதல்லவா நம் காதுகளிலே! தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, 1968-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உணவு உண்ணும் போது தொண்டை வலி இருந்ததால், சென்னை மருத்துவமனையில் டாக்டர்கள் அவரைப் பரிசோதித்தார்கள் புற்றுநோயின் அறிகுறி அவருக்கு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்: இதைக் கேள்விப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், அண்ணாவை மருத்துவமனையிலே சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார் டாக்டர்களை அழைத்து, நோயின் விவரங்களைக் கேட்டறிந்தார் அமெரிக்காவிற்காவது அண்ணாவை அழைத்துச் சென்று - சரியான சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று டாக்டர்களிடம் கூறி அதையே அண்ணாவிடமும் கூறி, அவர் வற்புறுத்தினார் பெருந்தலைவர் ஆறுதலைக் கேட்ட அண்ணா, பேச முடியாமல், சைகையால் நன்றி கூறிக் கை கூப்பி அவருக்கு விடை கொடுத்தனுப்பினார்: காமராஜர் கவலை தோய்ந்த முகத்தோடு அண்ணாவிடம் விடைபெற்றுத் திரும்பினார். அறிஞர் அண்ணா அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் கூறிய யோசனையையும் ஏற்றார். அவரது உடல் மோரியல் மருத்துவமனையிலுள்ள டாக்டர் மில்லர் பரிசோதித்து, நோயைக் குணப்படுத்தினார். 6.11.1968 - ஆம் ஆண்டன்று அவர் சென்னை மாநகர்திரும்பி வந்த ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்: