பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.1.8 தேசியத் தலைவர் காமராஜர் இந்த நேரத்தில் நாகர் கோயில் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. பெருந்தலைவர் காமராஜர் நாடாளுமன்றத்துக்குக்காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டார் அறிஞர் அண்ணா அவர்கள் காமராஜரை எதிர்த்து தி.மு.கழகம் போட்டியிடாது என்று அறிவித்தார்: சும்மா இருக்குமா மூதறிஞரின் சுதந்திரா கட்சி? அது போட்டியிட்டது. அறிஞர்அண்ணாவைத் தேர்தல் பிரசாரத்திற்காக வருமாறு சுதந்திரா கட்சி வற்புறுத்தி அழைத்தும், பெருந்தலைவர் காமராஜர் தங்கக் காப்பு அதைத் தேர்தல் கனலில் உருக்கி அழிக்கமாட்டேன் என்று கண்டிப்பாகக் கூறியது மட்டுமன்று, அறிக்கையும் விடுத்துத் தனது கருத்தைக் கூறிவிட்டார். பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜியின் சுதந்திரா கட்சியைத் தோற்கடித்தார். தலைவர் அமோக மக்கள் செல்வாக்குடன் பெரும் வெற்றியைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினரானார்: பேரறிஞர் அண்ணா 1969-பிப்ரவரி மாதம் 2-ம் நாள் மறைந்தார். இந்த மரணச்செய்தியைக் கேட்ட பெருந்தலைவர்காமராசர் மீளாத் துயரடைந்தார். தமிழ் மக்கள் வாழ்வு முன்னேறக் கடுமையாக உழைத்த நல்ல ஒரு தலைவனை நாடு இழந்துவிட்டது. தி.மு.கழகம் நடுக்கடலிலே தத்தளிக்கும் கப்பல் போல இருக்கிறது!’ என்று ஒரு சோக அறிக்கையை விடுத்து அவர்தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டார். அண்ணா மறைந்ததற்குப் பிறகு, தமிழக முதலமைச்சராகக் கலைஞர்கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தார் தமிழ்நாட்டின் மூத்தத் தலைவரான பெருந்தலைவர் காமராஜருக்குப் பொன்னாடை அணிவித்து அவரது வாழ்த்துக்களையும் கலைஞர் பெற்றார்: அப்போது பெருந்தலைவர் காமராஜர் கலைஞரை வாழ்த்தி ஆட்சியை நல்லா நடத்துங்கன்னே!” என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன் மறைந்தார். அவருக்குப் பதிலாக குடியரசுத் தலைவர் தேர்தல் 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி வந்தது. பழைய காங்கிரஸ் சார்பாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் கம்பா ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவ ரெட்டியை நிறுத்திட, கட்சியைக் கூட்டி முடிவெடுத்து அறிவித்தார். பிரதமர் இந்திராகாந்தி, தனது பெயரில் இயங்கும் இந்திரா காங்கிரஸ் சார்பாக, அப்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி என்பவரைப் போட்டியிடச் செய்தார். காங்கிரஸ்