பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ○ காங்கிரஸ் தோன்றியது தமிழ்நாட்டில்தான்! சரித்திரம் எழுதுகின்ற ஆசிரியர்கள் சிலர், சரிகமபதநிச கற்றிடும் ஆரம்ப வீணைவாத்திய இளைஞர்களைப் போலத் தவறாக அதன் நரம்புகளை மீட்டுகிறார்கள்! நரம்புகளில் நளினமிடும் அதன் ஒவ்வொரு ஒலியும், நாட்டை மயங்க வைக்கும் நாத இசைகளென்ற ராக நாணயம் என்பதனை மறந்து விடுகிறார்கள்! அழகாக வீணையை உருவாக்கி, அற்புதமான ஏழு நரம்புகள் அமைத்து, அதன் உச்சியிலே ஒரிருதாளமுடிச்சுகளை வைத்திருப்பது ஏன்? தேவைக்கேற்ற இசை இயக்கத்திற்குரிய பாதுகாப்புக்காகத் தானே இல்லையென்றால், ஊமை நரம்புகளால் உயிருக்கு என்ன பயன் என்று இரும்புக் கம்பிகளையே இணைத்திருக்கலாம் இல்லையா? இந்திய வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் ஸ்மித் அவர்கள், இந்திய வரலாறு வடக்கிலிருந்து தொடங்கி, தெற்கு, நோக்கிச்செல்கிறது. ஆனால், அண்மையில் அது தெற்கே தொடங்கி வடக்கே செல்லவேண்டும்” என்று குறிப்பிட்டி ருப்பதை, வரலாறு எழுதப்புகும் மூதறிவாளர்கள்சிந்திக்க வேண்டிய ஒன்று! அதனைப் போல, முரண்பாடான கருத்துக்களோ, கொள்கை களோ, ஒரு வரலாற்றில் இருப்பதனால், எழுத்தாளர்களாகிய நாம் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றுள் எது உண்மை, எது சிறந்தது என்பதை ஆதாரங்களோடு அடையாளம் கண்டு வரலாற்றுக்குப் பணியாற்றுவதே உண்மையான சரித்திரத்திற்கேற்ற அறநெறியாகும்! வஞ்சகமாக வரலாறு ஏன்? இந்திய வரலாற்றை எழுதுகின்ற வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும், வட இந்தியாவிலே இருந்துதான் இந்திய சரித்திரமே தொடர்கிறது என்ற நோக்கிலே எழுதுகிறார்கள்! ஆனால், உலக வரலாற்றுப் பேராசிரியர்கள் எல்லாம், மனித வரலாறு எங்கேயிருந்து உருவாகிறது என்ற ஆய்வுச் சர்ச்சைகளிலே ஆளுக்கொரு விதமாக, அவரவர் முடிவை அறிவிக்கின்றார்கள் 'குமரி முனைக்குத் தெற்கே உள்ள, உலக நடுக்கோட்டிற்கு