பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 419 கட்டுப்பாட்டை மீறினார் பிரதமர். மனச் சாட்சிப்படி ஒட்டுப் போடுவோம் என்று பிரதமரும், அவரது குழுவினரும் அப்போது அறிவித்தார்கள். இதனால், வி.வி. கிரி, வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர் சஞ்சீவ ரெட்டி தோற்றார். இந்தக் கட்சிக் குழப்பப் போட்டா போட்டியால், காங்கிரஸ் கட்சி ஸ்தாபனகாங்கிரஸ் என்றும், இந்திராகாங்கிரஸ் என்றும் இரண்டாக உடைந்தது. பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தியின் செயல்; கட்சி விரோதமானது என்று கருதி இந்திரா காந்தியின் பின்னால் செல்லாமல், தனது தாய்க்கட்சியான ஸ்தாபனகாங்கிரசிலேயே அவர் சாகும் வரை மனச்சாட்சியோடு நீடித்திருந்தார். இந்தியா முழுவதுமாகக் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும்தான் பெருந்தலைவர் காமராஜர்தலைமையில் மிகப் பலமாக அது இயங்கி வந்தது. ஏதோசிலர் பதவியாசை காரணமாகப் பிரதமர் இந்திரா காந்தியின் கட்சியிலே சேர்ந்தார்கள்! ஆனால்தமிழ்நாட்டில் ஸ்தாபனகாங்கிரஸ் அசைக்க முடியாத உரத்தோடு நிலைத்து நின்றது! அதற்குக்காரணம், பெருந்தலைவர் காமராஜரின் தலைமைதான். இதனால், இந்திரா காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஸ்தாபனக் காங்கிரசையும், காமராஜரையும் அரசியல் வடிவத்தோடு இந்திரா காந்தி எதிர்த்தாக வேண்டிய நிலையேற்பட்டது. அதற்காக, தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார். இந்திரா காந்தியின் மன்னர் மானிய ஒழிப்பு அவசரச் சட்டம் செல்லாது என்று, டில்லி சுப்ரீட் கோர்ட் தீர்ப்பு அளித்ததால், இந்திரா காந்தி டில்லி நாடாளுமன்றத்திற்கு 1971-ல் தேர்தல் நடத்தத் தயாரானது! அதனால் தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியைத் தேர்தலிலே சந்திக்கத் தயாரானது. அறிஞர் அண்ணா உயிரோடுள்ளபோது 1967-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலுக்கும், அண்ணா இறந்துவிட்ட பிறகு நடைபெறும் 1971-ஆம் ஆண்டு தேர்தலுக்கும் - ஏகப்பட்ட முரண்பாடுகள் உருவாயின. 1967ஆம் ஆண்டில், மூதறிஞர்ராஜாஜி, பெருந்தலைவர்காமராஜர் காங்கிரசைப் பலமாக எதிர்த்துக் காங்கிரசை வீழ்த்தினார். அதே மூதறிஞர் ராஜாஜி 1971-ஆம் ஆண்டில் காமராஜரது தலைமையில் இயங்கும் ஸ்தாபனக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அண்ணா இல்லாத கலைஞர்தி.மு.கழகத்தைப் பலமாக எதிர்த்தார்.