பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 தேசியத் தலைவர் காமராஜர் தி.மு.கழகம் கூட்டணியில், இந்திரா காங்கிரசுக்கு 10 நாடாளுமன்றத் தொகுதிகளேஅளிக்கப்பட்டன. சட்டசபைக்கு ஒரு தொகுதியுமில்லை. இதனால், மனநிறைவு பெறாத இந்திரா காங்கிரஸ், மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், தமிழக ஆட்சியை தி.மு.க.விடம் கொடுத்து விடுமளவிற்கு நிர்வாகம் நடத்தி, முதலமைச்சர் பதவியை இழந்த பக்தவத்சலம், ஆகியோர் கலைஞரிடம் தூதுவந்த பிறகும்கூட, கலைஞர்-தான்கூறிய முடிவிலே இருந்துகடுகளவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். 1971-தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மூதறிஞர் ராஜாஜி பெருந்தலைவர் காமராஜரிடம் கூட்டணி வைத்து, இருவரும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். தமிழ் நாட்டில், மூதறிஞர் ராஜாஜியின் அரசியல் அறிவைப் புறங்காட்டி ஒடச் செய்த பெருந்தலைவருடன் இப்போது தேர்தல் கூட்டணி வைத்தார் ராஜாஜி தமிழ் நாட்டு அரசியலில் காமராஜர் சக்தி முன்பு இராஜாஜியால் ஒர் அணுவையும் அசைக்க முடியாது என்ற நிலை உருவான பிறகு, வடநாட்டு அரசியலில் காந்தியின் கருணையிடம் தஞ்சமடைந்து - பெரும் பெரும் பதவிகளைக் காங்கிரஸ் கட்சியின் பெயரால் சுகபோக மனுவித்த ராஜாஜி, வடநாட்டு அரசியலில் காந்தியிடமும், நேருவிடமும் மோதிப் பார்த்துக் காங்கிரஸ் கட்சியை அழிக்க; அதன் எதிரிகளிடம் காங்கிரசைக் காட்டிக் கொடுத்துவிட்ட ராஜாஜி, மாநிலக் காங்கிரஸ் ஆட்சிகளையும், அதன் மாநிலக் கிளைக்கட்சிகளையும் சுதந்திரா கட்சிபெயரால் குலைத்துக் கலகலக்க வைத்த ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் அரசியல் பலத்தை அழிப்பதொன்றே தனது பிறவியின் பெரும்பயன் என்று அல்லும் பகலும் அரும்பாடு பட்டுத் தோல்விகண்டு, காங்கிரஸ் எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்தார். காங்கிரசைத் தமிழகத்தில் ஒழித்துக் கட்டிய ராஜாஜி, அறிஞர் அண்ணாவையும் அரசியல் சதியால் அழித்துவிடலாம் என்று திட்டமிட்டு, 1967-ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றியின் நன்றியறிவிப்பு விழாவில், கூட்டணிக் கூட்டத்தின் கடைசி பெரும் தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு, அதாவது, தி.மு.க. ஆட்சி, தன்னால்தான்.அமைந்தது என்ற பெருமையை உலகம் உணர வேண்டும் என்ற எண்ணத்தால், மேடையிலே அமர்ந்திருந்த தனது கட்சிப் பொதுச் செயலாளரான எஸ்.எஸ். மாரிசாமியிடம் 'அண்ணாவை விழாவில் பேசச் சொல்லுங்க, நான் கடைசியாகப் பேசுகிறேன் என்று கூறினார்.