பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.24 தேசியத் தலைவர் காமராஜர் வளர்ச்சிக்காக இழந்தவர்; திண்டுக்கல் தொகுதியிலே போட்டியிடப்போதிய பணமில்லாத நோஞ்சான் காங்கிரசாக இருந்தவர்; படை பலத்தில் சில யோக்யர்களை மட்டுமே நம்பி அரசியல் நடத்துபவர்; பணபலமற்ற பரிதாபத்துக்குரிய 'பாவமாகப் போட்டியிட்ட பெருந்தலைவர் காமராஜரின் வேட்பாளர் பெற்ற வாக்குகள் எவ்வளவு? ஒரு லட்சத்து 19ஆயிரம் ஒட்டுக்கள்! அதாவது, வேட்பாளர்கள் நால்வருள் இரண்டாம் இடம் பெற்றவர் அவர்தான் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்காரர். எப்படி பெருந்தலைவரின் மக்கள் பலம்? பாண்டிச்சேரியில் இந்திரா - காமராஜர்! திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜர் பெற்ற வாக்குகளையும், மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களது செல்வாக்கைப் போல, காமராஜருடைய மக்கள் செல்வாக்கு சிறிதும் சிதறாமல், சிதையாமல், சிந்தாமல், மற்றக் கட்சிகளுக்குள் பதவிகள் சரணம் போடாமல், போலிகளுக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு வாழாமல் - அப்படியே காமராஜர் பலம் நிலைத்து நிற்பதைக் கண்ட பிரதமர் இந்திராகாந்தி, பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலிலும், கோவை நாடாளுமன்றத் தேர்தலிலும், கோவை மேற்கு சட்ட சபை தொகுதித் தேர்தலிலும், அ.தி.மு.கவைத் தோற்கடிக்க வேண்டுமானால், பெருந்தலைவர் காமராஜருடைய ஸ்தாபன காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் முடியும் என்று முடிவு செய்தார். பிரதமர் இந்திரா காந்தியின் சார்பில், பெருந்தலைவர் காமராஜருடன் தேர்தல் கூட்டணி அமைத்திட, பெருந்தலை வருடைய தமிழக முதல் மந்திரி சபையிலே நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தை, காமராஜருடன் பேச்சு நடத்துமாறு அனுப்பி வைத்தார். பெருந்தலைவரும் இந்திரா காந்தியின் பேச்சுக்கு மறுபேச்சுக் கூறாமல் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டார். பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுக்கு 16 சட்டசபைத் தொகுதிகளிலும், இந்திரா காங்கிரசுக்கு 14 இடங்களிலும் போட்டிப் போடலாம் என்று இரு காங்கிரசும் ஒப்புக் கொண்டன!