பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 425 அதே பாண்டிச்சேரி தேர்தலில், அதாவது புதுச்சேரி தேர்தலில், புதுச்சேரி அ.தி.மு.க. 12 இடங்களிலும், 2கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெருந்தலைவர் காமராஜர் - இந்திராகாங்கிரஸ் கூட்டணிக்குப்பத்தே பத்து இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனவே, இந்த மாநிலத்திலே அ.தி.மு.க. அமைச்சரவை அமைத்தது. பாண்டிச்சேரியை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு இரண்டே இரண்டு இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு ஒர் இடமும் சுயேட்சை வேட்பாளர் ஒர் இடமும் பெற்றார்கள். கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும், கோவை மேற்கு சட்டசபைத் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே வென்றார்கள். தி.மு.க. தனது சட்டசபைத் தொகுதியை அ.தி.மு.க. விடம் பறிகொடுத்தது. ..! ي*:. .؛ ليدل. نوپايل - تمیس سنگینامه ఫైళ్ల ఫైళ్ల క్లే శ్రేక్ష *** ** *** " : "నీ