பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ5) எமர்ஜியென்சி ஏன் வந்தது? உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி என்ற தொகுதியில் பிரதமர் இந்திராகாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று, 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், இந்திராகாந்தி பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்! இல்லாவிட்டால் இந்திரா காந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்’ என்று ஜெயப்பிரகாஷ் நாராயணரும், மொரார்ஜிதேசாயும் அறிக்கை விடுத்தார்கள். மற்ற வடநாட்டு எதிர்க்கட்சிகளும் இந்திரா பதவி நீடிப்பை எதிர்த்தன! இதைக் கண்ட பிரதமர் இந்திராகாந்தியால், 1975-ஜூன் 26-ஆம் தேதியன்று, காரணமில்லாமலே இந்தியா முழுவதுமாக நெருக்கடிநிலை அமுல் செய்யப்பட்டது. இந்தப் பிரகடனத்தால், இந்திராவுக்கு யார் யார் அரசியல் விரோதிகளோ, அவர்களை எல்லாம் எமர்ஜியென்சிசட்டப்படி சிறையிலே அடைத்தார் இந்திரா. அதே நேரத்தில் பத்திரிகைகளையும் மத்திய அரசு தணிக்கை செய்தது. 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதே எமது லட்சியம் என்று கூறிக் கொள்ளும் இந்திரா காந்தி, சர்வாதிகாரக் கொற்றக் கொடையின் கீழ் இட்லர் தர்பார் நடத்துவது, இந்த நாட்டிற்கு இப்போதைக் குத் தேவைதானா?' என்று பெருந்தலைவர், காமராஜர் திருத்தணிப் பொதுக்கூட்டத்தில் நெருக்கடி நிலையைக் கண்டித்துப் பேசிக் கேள்வி கேட்டார். நெருக்கடி நிலையைத் தி.மு.கழகம் செயற்குழு மிக வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்குப் பிறகு, ஜூலை மாதம் 4-ம் நாள் அன்று கலைஞரும் நாவலர் நெடுஞ்செழியனும் பெருந்தலைவர் காமராஜரை, அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார்கள். இவர்கள் இருவரையும் கண்டதும் காமராஜர் கண்கலங்கியபடியே அவர்களிடத்தில் தேசம் போச்சு, தேசம் போச்சு என்று அரற்றிக் கொண்டே எழுந்து முதல்வர் கருணாநிதியை ஆரத் தழுவிக் கொண்டார்.