பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 427 கலைஞர் கருணாநிதி, பெருந்தலைவரின் பின்புறமுதுகை இறுகத்தழுவியபடியே, 'ஐயா, நீங்கள் சொல்லுங்கள். இப்போதே நான் மந்திரி சபையை ராஜிநாமா செய்து விடுகிறேன். நாங்கள் எதற்கும் தயாரய்யா இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க, நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள். தங்கள் பின்னால் நாங்கள் வருகிறோம்...' என்றார். 'பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒன்றில்தான் இப்போது ஜனநாயகம் இருக்கிறது. நீங்களும் ராஜிநாமா செய்துவிட்டால் - அதுவும் போய்விடும். கொஞ்சநாள் பொறுமையாக இருங்கள். ஒரு நேரம் வரும்” என்று பெருந்தலைவர் கூறினார். கருணாநிதியை எதிர்த்துப் போர்! செங்கற்பட்டில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் பின் வருமாறு பேசினார். "கலைஞர்கருணாநிதி ஆட்சியில் எந்தத் திட்டமும் மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை. ஒவ்வொரு திட்டமும் முன்னுக்குப் பின் முரண்பாடாகவே நடந்து வருகிறது. குறிப்பாக 1971-72 - ஆம் ஆண்டில் மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார் என்கிறார். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழகம் எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்தக் கொள்ள முடியும்? என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்." 'மதுவிலக்கை முதன் முதலில் கொண்டு வந்த ராஜாஜி, கருணாநிதியின் வீட்டிற்கே சென்று, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்பும் கருணாநிதி வீடு சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று கோரிக்கையை எழுப்பினார் யார் பேச்சையும் அவர் கேட்காமல், மதுவிலக்கு ஒரு கேள்விக்குறி, வியப்புக்குறி என்றெல்லாம் பேசினார்: மதுவிலக்கை ரத்தும் செய்தார்.' 'மதுவை மறந்திருந்த தலைமுறைகள் எல்லாம், இப்போது மது போதையர்களாக நடுத்தெருவிலே விழுந்து கிடக்கின்ற பரிதாப நிலையிலே தமிழ்நாடு தத்தளித்து வருகின்றது!1973 ஆம் ஆண்டு மறுபடியும் மது விலக்கைக் கொண்டு வந்தார். இப்படியெல்லாம் கருணாநிதி முன்னுக்குப் பின்னாக, முரனாகச் செயல்படுகிறார்!"