பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 தேசியத் தலைவர் காமராஜர் 'ஒருமுறை குடித்துப் பழகிப்போன தமிழ் நாட்டு மக்கள், மீண்டும் மீண்டும் அந்தக் குடிப்பழக்கத்தை மறக்க முடியுமான்னே! நினைப்பதும் மறப்பதும் என்ற பழக்கத்தை ஒர் ஆட்சி, மக்கள் இடை உருவாக்கலாமா? இந்த ஆட்சி வேண்டுமானால் - துக்ளக் ஆட்சியாக இருக்கலாம். மக்கள் என்ன மாயாஜாலம் தெரிந்தவர்களா?” 'நினைத்த நேரத்தில் மதுவைக்குடி என்று சொல்லி - மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்து விட்டு, மதுவிலக்கைக் கொண்டு வந்து விட்டேன்; இப்போது குடிக்காதே என்று ஒர் அரசு கூறினால், இந்த சர்க்கார்துக்ளக்சர்க்காரா? இல்லையா?" 'மக்களுக்கு விரோதமாக நடக்கும் இந்த தி.மு.க. ஆட்சியை எதிர்த்து, வருகின்ற அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று மதுரை நகரில் அகிம்சா போராட்டப் போரை அறிவிக்கப் போகிறேன். போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துகிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் அதற்குத் தயாராக வேண்டும்.” என்று, பெருந்தலைவர்காமராஜர்செங்கற்பட்டு பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி மைதானத்திலே பேசும்போது காரசாரமாகக் குறிப்பிட்டார். எனவே, பெருந்தலைவர் காமராஜர் கலைஞர் கருணாநிதி ஆட்சியை எதிர்த்தும், அவரே போராட்டத்தினை நடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றும், மதுரை மாநகரிலே முதன் முதல் போராட்டத்தை அறிவிக்கப் போவதாகவும் திட்டமிட்டிருந்தார்: அதற்கான போராட்டப் பணிகளை அப்போதைய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவராக இருந்த மதுரை நெடுமாறனிடம் ஒப்படைத்திருந்தார்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அக்டோபர் முதல் நாளன்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி கணேசன் தன் விழாவைக் கட்சித் தலைவர்களைக் கொண்டு எளிமையாக நடத்துவது வழக்கம். அது போலவே, 1975-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளன்று பெரியவர் பெருந்தலைவர் காமராஜர் தனது விழாவிலே கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும் என்று விரும்பினார்: மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பழ. நெடுமாறன், பா. ராமச்சந்திரன், குமரி அனந்தன் போன்றவர்களை யும் தனது விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியிருந்தார்.