பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தேசியத் தலைவர் காமராஜர் இருபுறமும் இருந்த நிலப்பகுதிகளேமக்கள்.வாழ்வதற்குரிய இடம்!” 'அங்கேதான், மனித நாகரிகம் முதலிலே தோன்றி வளர்வதற்கு வித்திட்டது!’ என்று செர்மானிய வித்தகர் ஹெக்கேல் சுட்டுகின்றார் -தமிழ் மண்ணை' 'மனித சாதியாரின் தொட்டில் தென்னிந்தியாவாக இருக்கலாம்; வடதிசை மக்களின் முன்னோரும் மத்தியத் தரைக்கடற்கரையோர நாடுகளில் உள்ள மக்களின் முன்னோரும், முதலிலே இருந்து சென்ற இடம் - தென்னிந்தியாவாக இருக்கலாம்” என்று, மேனாட்டு மேதை சர்சான் எவன்ஸ் என்பார் வரலாற்றை வரையறுக்கிறார். 'மனிதன்மட்டுமல்ல; முந்திய விலங்கும் பறவையும் தோன்றும் முன்புகூட, குமரிக்கண்டம் நீண்டகாலமாக நிலைத்திருந்தது!’ என யோவான் என்ற இங்கிலாந்து சரித்திரப் பேரறிஞன் வரம்பு கட்டுகின்றார்வரலாற்றுக்கு! 'தெற்கே கடலில் மூழ்கிப்போன குமரிநாட்டின் எல்லையிலே இருந்து; வடக்கே இமயமலை வரை இருந்தோர் தமிழராவார்' என்று, தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தனது ஆய்வைத் தமிழ் நிலப் பகுதியிலே இருந்துதான்துவங்குகிறார்: 'தெற்கே, இந்து மாக்கடலில், ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும், அதுவே பண்டைப் பாண்டி நாட்டின் பெரும் பகுதியென்றும், அந்நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், லெமூர் என்ற குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமூரியா என்றும் அழைக் கின்றனர்." -என்று, பன்மொழி ஆய்வுப் பண்டிதர் தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார் அவரது ஆய்வும் குமரி முனையிலே இருந்துதான் பரவுகிறது! "இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்ல; உலகத்திலேயே மிகப் பழைய நிலப்பகுதி தமிழகமே! மக்களின் முதல் தோற்றமே இங்குதான் நிழ்ந்திருக்க வேண்டுமென்று நில நூல் வல்லார் அறுதியிட்டு இயம்புவதாகப்பேராசிரியர்சொக்கப்பாஅறிவிக்கிறார்: உலகில், முதன் முதலில் மண் எங்கே தோன்றியது? மனிதன் எங்கேதோன்றினான் என்பதை ஆராய வந்த பேரறிஞர்கள் எல்லாம், தமிழகத்தின் குமரிக் கண்ட நிலப் பகுதிகளையே, உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்! அதனைப் போலவே, மதம், இனம், மொழி, நாகரிகம் எதனை எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழ்மண்தான் அவைகட்குரிய பிறந்த நிலமாகத் தோற்றமளிக்கின்றது.