பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 429 அக்டோபர் முதல் நாள் வந்தது. நடிகர் திலகம் கணேசன், பெரியய்யா வரப்போகிறார் - தன்னை வாழ்த்த என்று தடபுடலாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருந்தார். குமரி அனந்தன், பா. இராமச்சந்திரன் ஆகியோர் பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்கு வந்திருந்து விழாவிற்குத் தலைவர் வருகைக்காக காத்திருந்தார்கள். வெளியே வராண்டாவிற்கு வந்த பெருந்தலைவர், 'என்ன விசேஷம்னே என்றார். சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா ஐயா, தாங்கள் வந்து சிவாஜியை வாழ்த்த வேண்டும் என்று அவர் வீட்டிலே காத்திருக்கின்றார்ஜயா என்றார்.பா. ராமச்சந்திரன் 'நான் கணேசன் விழாவுக்குப் போகமாட்டேன் என்று நெடுமாறனிடம் வாக்குக் கொடுத்துவிட்டேனே! நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே, அது போதாதா?’ என்றார்: 'பெரியவர் வந்து வாழ்த்தாமல் நான் எனது விழாவைக் கொண்டாட மாட்டேன் என்று சிவாஜி அழுது கொண்டே சொல்கிறார் ஐயா!' என்று குமரி அனந்தன் தணிவான குரலில் பணிவோடு கூறும்போது, கணேசன்விழாவுக்குப்போகமாட்டேன் என்று நெடுமாறனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! நாளைக்கு மதுரையில் போராட்டநாள் அறிவிப்பு விழாவுக்குப் புறப்படப் போகிறேன்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள் என்று பெருந்தலைவர் மீண்டும் பதில் சொன்னார்: அப்போது கணேசன் வீட்டிலே இருந்து ஐயா, புறப்பட்டு விட்டாரா? என்று கேட்ட வண்ணம் டெலிபோன்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பெருந்தலைவரைக் கணேசன் வீட்டு விழாவிற்கு அழைத்துப் போக வந்தவர்களும், விடாப்பிடியாக அங்கேயே உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். தனது அறையிலே இருந்து வெளியேவந்த காமராஜர், இன்னும் போகலையா நீங்கள்? என்னை வம்புக்குள்ளே இழுத்துவிடத்தான் உட்கார்ந்திருக்கிறீகளா? என்று அவர் சலிப்போடு குமரி அனந்தனைக் கேட்டார்! - பிறகு, பெருந்தலைவர் ஒருவித வேதனையும் விரக்தியும் கலந்த உணர்வோடு மாலை வேண்டுமே என்றார். 'எல்லாம் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா என்றார்கள் வந்தவர்கள் -சரி, கார் என்றார் பெருந்தலைவர் தயாராக இருக்கிறது ஐயா!' என்றனர். உடனே காமராஜர் போனவழி, வந்த வழி தெரியாமல்