பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.30 தேசியத் தலைவர் காமராஜர் காரிலே குமரிஅனந்தன், பா. இராமச்சந்திரன் ஆகியோருடன் சென்று, மாலையைச் சிவாஜி கணேசன் கழுத்திலே அணிவித்து, வாழ்த்திவிட்டு விர்ரென்று வீட்டுக்கு விரைந்து வந்து சேர்ந்தார் பெருந்தலைவர் சிவாஜி கணேசனது பிறந்த நாள் விழாவிற்குப் பெருந்தலைவர் காமராஜர் சென்று மீண்ட விவகாரம் நெடுமாறனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நம்மிடம் போகமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த தலைவர் பிறருடைய நெருக்கல்களுக்கு மனமிரங்கிப் போனது, அவர் மனதுள் தலைவர் மீது ஏதோ ஒருவித சினச் சிராய்வை ஏற்படுத்திவிட்டது. மதுரையில் அக்டோபர் இரண்டாம் நாளன்று, காந்தியடிகள் பிறந்த தினவிழாவின்போது, தி.மு.க. ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்போகிறது ஸ்தாபனகாங்கிரஸ் என்றும், அந்தப் போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தப் போகிறேன் என்றும், தமிழ் நாட்டின் பல ஊர்களிலே பேசி காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்ச்சிகளுட்டிவந்த பெருந்தலைவர்காமராஜர், அந்த அறிவிப்புக் கூட்டத்தை மதுரை மாநகரிலே நடத்தும் பொறுப்பை நெடுமாறனிடம் வழங்கியிருந்தார் அல்லவா? அந்தப் பொறுப்பு எந்த அளவிலே இருக்கிறது என்பதை அறிய, பெருந்தலைவர் வீட்டிலே இருந்த அவரின் பணியாளர் வைரவன், பலமுறை நெடுமாறன் இல்லத்திற்கு டெலிபோன் செய்தும், அவர் வீட்டில் இல்லை என்ற பதிலே பலமுறைகளும் ஒலித்தன. மேலும், சொல்லப்போனால், தலைவர் மீதுள்ள தணியாச் சினத்தால், அவர் வீட்டிலிருந்து கொண்டே, இல்லை இல்லை என்று வீட்டாரிடம் சொல்லி வைத்திருந்ததாகவும் செய்தி வந்தது தலைவர் வீட்டிற்கு! அதனால், பெருந்தலைவர் மனமுடைந்து மறுநாள் நடக்கப்போகும் போராட்ட அறிவிப்புப் பணிகளைச் சில மணிநேரங்களே உள்ள காலக் குறுக்கத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தபடியே அன்று மதியம் வழக்கம்போல ஒரு சிறுதுக்கத்தில் ஆழ்ந்தார். மாலை உறக்கம் நீங்கி எழுந்த தலைவர், நெடுமாறனிடமிருந்து ஏதாவது போன்வந்ததா? என்று வைரவனிடம் கேட்டார் இல்லை ஐயா என்று வைரவனிமிருந்து பதில் வரவே, வேறு ஒன்றும் செய்யாமல் மனப்புழுக்கத்துடன் இருந்து விட்டார் - பெருந்தலைவர்