பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ தங்க மனிதர் காமராஜர்! & & -- - 4. - * - • * - மனிதன் என்பவன் வெறும் உடம்பு மட்டும் அல்லன்; அதற்கும் மேலான ஓர் அம்சம் உடையவன்' 'மனிதன் மிருகமும் அல்லன், கடவுளும் அல்லன்; தெய்வத் தன்மையை அடைய முயலும், கடவுள் சிருஷ்டி ஆவான்' என்றார் அண்ணல் காந்தியடிகள்! "கிரேக்க நாட்டுத் தத்துவஞானி சாக்ரடீஸின், தத்துவ வித்தக மாணவனான பிளாட்டோ, மனித குலத்தை மூவகையாகப் பிரிக்கின்றார்; தங்க மனிதர்கள்; வெள்ளி மனிதர்கள்; இரும்பு மனிதர்கள்” என்கிறார்! ஒரு நாட்டை எவ்விதக் குறையுமில்லாமல் - வராமல், ஆட்சி செய்பவனைத்தங்க மனிதன் என்கிறார். ஒரு நாட்டைஎதிரிகளிடம் இருந்து காப்பாற்றுபவன், அதற்காகத் தன்னையே தியாகம் புரிந்து கொள்ளும் படைவீரர்களை வெள்ளி மனிதர்கள் என்கிறார்.அவர்! மூன்றாவதாக, இரும்பு மனிதர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? உலக மக்களை வாழவைக்கும் தொழிலாளர் பெருமக்களைத்தான் இரும்பு மனிதர் என்று, மனித குலத்தில் அவர்களை அடையாளம் காட்டுகின்றார் - பிளாட்டோ! திருவள்ளுவன் பெருமான் அடையாளம் காட்டவில்லையா மக்கள் இனத்தை? சான்றோர், புல்லறிவாளர்கள், கயவர்கள் என்று! அவரும் மூன்று வகையாக வகைப்படுத்துகின்றார் அல்லவா? கிடைக்க முடியா தங்கத்தைப் போன்ற உயர்ந்த மதிப்பை, மரியாதையை - மக்களிடம் பெறுகின்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட மக்களின் காவலர் அதாவது ஒரு நாட்டின் அரசர் என்று பிளேட்டோ குறிப்பிடுகிறார். இந்த வகையைச் சார்ந்த சான்றோர் இனத்தின் வழிகளை, நெறிகளை, நீதிமுறைகளை, மாசு சூழா மக்கள் சேவைகளைச் செய்கின்றவர்கள் தங்கம் போன்றவர்கள் தானே அந்த மனிதர்களிலே ஒருவராக உருவானவர்தான் பெருந்தலைவர் காமராஜர் அவரது பொதுவாழ்க்கையின் வகையறிந்தோர் உணர்வர் இதை! நாட்டை ஆள்பவர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும் என்பது பேரறிஞர் பிளேட்டோவின் குடியரசு சட்டம்.