பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 தேசியத் தலைவர் காமராஜர் பெருந்தலைவர் காமராஜர் தனது கடைசி காலம் வரை திருமணம் செய்து கொள்ளாதவராகவே இருந்தார். எந்த வற்புறுத்தலும்வலியுறுத்தலும், அவரது பிரமசரிய முடிவை மாற்றவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களது வளர்ச்சி நிலையைப் பற்றி LAUATER என்ற அறிஞர் மக்கள் குலத்தை மூன்று வகையாகத்தான் வகுத்தார். அவை என்ன தெரியுமா? 'தமது நிலையிலே தாழ்ந்து கொண்டே போகிற மக்கள் ஒருவகையினர் தமது நிலையிலே, செயலிலே, பண்பாடுகளிலே, ஒழுக்க உயர்வுகளிலே, அறிவுத்துறைகளிலே, என்றும், எப்போதும், எங்கும் நிலையாக நின்று நிலவுபவர்கள் மறுவகையினர்! மூன்றாவது யார் தெரியுமா? எந்தத்தடைகள் வந்தாலும். ஏறென நிமிர்ந்து, உரமாக நின்று, எதையும் சாதிக்க என்னால் முடியும் என்று முன்னேற்றப் பாதையிலே சிங்க நடை போடுகிறார்களே; அந்த அரிமாக்கள்தான் என்பவையே லாவாடர் வகுத்த மனித முறைகளாகும். இந்தத் தத்துவப்படி பார்த்தால் உலக மனிதர்கள் அனைவரும், ஏன் - பெருந்தலைவர் காமராஜர் உட்பட்ட மேதைகள் எல்லாரும் இந்த வகைகளிலே வந்து விடுவார்கள்.” எனவே, மனிதன் என்பவன் பாதிப்புழுதியாகவும், பாதி தெய்வமாகவும் தோன்றுபவன் தான்.