பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தேசியத் தலைவர் காமராஜர் முருக - தனுஷ்கோடி எழுதும் சான்று! அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகக் காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் பிறந்த வரலாறு எப்படி என்பதை எழுதுவது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். "ஏனெனில், காங்கிரசேதமிழகத்தில்தான் பிறந்தது என்பது யாருக்கும் தெரியாது.” சென்னையில் கலெக்டராக இருந்த திவான்பகதுர் ரகுநாதராவ் வீட்டில், 1884-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ஆம் நாளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தவர் திரு. ஹியூம் என்னும் இவர்தான்! பூர்வாங்கக் கூட்டத்தில், டாக்டர் சர். சுப்பிரமணிய ஐயர், பனப்பாக்கம் ரங்காச்சார்லு, எழும்பூர்ரங்கைய நாயுடு, சுரேந்திரநாத் பானார்ஜி, மனமோகன்கோஷ், தாதாபாய் நெளராஜி, வாமன் ராமாயண் மண்டிலிக், காசிநாத்திரயம்பக், மற்ற சிலரும் கலந்து கொண்டார்கள்; 'நாட்டு முன்னேற்றத்திற்கு மிகவும் உண்மையுடன் பாடுபடுவோர் எல்லோரும் ஒன்று சேர்ந்து - ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆண்டில் செய்யத் தகுந்த அரசியல் முயற்சிகளை விவாதித்து நிச்சயித்தல்' என்ற விஷயம் பூர்வாங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 'அடுத்த கூட்டம் 1885-ம் ஆண்டில் புனா நகரில் கூடுவது என்றும், அதற்கு எல்லோருக்கும் அழைப்பு அனுப்புவது என்றும், அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.” "பம்பாயில் உள்ளே கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், 1885-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நண்பகல் 12-15 மணிக்கு, முதல் காங்கிரஸ் கூடியது. "சென்னையில் இருந்த பிரபல தலைவர்களும், சுதேசிமித்ரன் இந்து பத்திரிகைப் பிரதிநிதிகளும் இந்தக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தாதாபாய் நெளரோஜி எல்லாரையும் உரையாற்றி வரவேற்றார் டபிள்யூ. சி. பனார்ஜி இந்த முதல் காங்கிரசுக்குத் தலைமை தாங்கினார். வங்காளக் கிறிஸ்தவரும் பாரிஸ்டருமான இவர்பெயரைஏ.ஏ. ஹியூம் மு. மொழிந்தார் டாக்டர்சர். மணி ஐயர்வழிமொழிந்தார். (. காமராஜ் ஒரு சரித்திரம் பக்கம் 205-206)