பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 33 சென்னை மாநகரில் 1884-ஆம் ஆண்டில் கலெக்டராக இருந்தவர் திவான்பகதூர் ஆர். இரகுநாதராவ் என்பவர். அவருக்கு நெருங்கிய நண்பர் திரு. ஆலன் அக்டேவியன் ஹியூம்! திரு.ஹியூம், வங்காள மாநிலத்தில் ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி! திவான் பகதூர் சென்னையில் கலெக்டராக இருந்தவர் எனவே, ஆட்சித் துறையிலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அறிவர். ஒய்வு பெற்ற கலெக்டர் ஆர். ரகுநாதராவ், மதராஸ் மகாஜன சபையின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர். அவரும் பொதுத் தொண்டில் பொறுப்பான ஆர்வமிக்கவர். அதனாலும் அவர், திரு. ஹியூம் அவர்களுக்கு நண்பராகத் திகழ்ந்தார். அத்தகைய ஒரு முன்னாள் கலெக்டர் வீட்டிற்கு 1884-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ஆம் நாள் திரு. ஹியூம் வருகை தந்துள்ளார். டாக்டர் சர். சுப்பிரமணிய ஐயர், பனப்பாக்கம் ரங்காச்சார்லு, எழும்பூர் பி. ரங்கையநாயுடு, நரேந்திரநாத்சென், சுரேந்திரநாத் பானர்ஜி, மனமோகன் கோஷ், சரண்சந்திரமித்தர், கே.டி. லதலாங், புனா, விஜயரங்கமுதலியார், பாண்டுரங்க கோபால், பஞ்சாப் சர்தார் தயாள்சிங், அலகாபாத்ஹாரிஸ், சந்திரர், உத்தரபிரதேசம் காளிபிரசாத், இலக்குமி நாராயணன், பூரீராம், தாதாபாய் நெளரோஜி, வாமன் ராமாயண், வி.என். மண்டிலிக், காசிநாத்திரயம்பக் போன்ற சிலரையும் வரவழைத்துச்சந்தித்திருக்கிறார்.திரு. ஹியூம். அனைவரும் கூடிக் கலந்து, காங்கிரஸ் மகாசபையை உருவாக்கவும், புனாவிலே அடுத்த காங்கிரஸ் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அதற்கான அழைப்புக்களை எல்லோருக்கும் அனுப்புவது என்றும், அன்று குழுமிய மகாஜன உறுப்பினர்களும் அல்லாத பிறரும் முடிவெடுத்தார்கள் என்றால் என்ன பொருள்? தேசியக்காங்கிரஸ் மகாசபை என்ற கற்பகவிருட்சம் வளர, ஓங்க, தழைத்திட, தமிழ் மண்ணிலேதான் விதை விதைக்கப்பட்டது என்றல்லவா பொருள்? இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை என்ற கோட்டையைக் கட்டிட, தமிழ் மண்ணிலேதானே அஸ்திவாரக் கால் கோள்விழா நடத்தப்பட்டது என்பதுதானே உள்ளர்த்தம்! அதைத்தான், எந்த வரலாற்றாசிரியனும் கூறாத ஒரு துணிவான கருத்தை, தலைவர் காமராஜ் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் தலைவரானதும் அஞ்சா நெஞ்சுடன் அடித்துக் கூறியிருக்கிறார், 'நவசக்தி' என்ற நாளேட்டின் ஆசிரியர். இதே கருத்தை திரு. ம.பொ. சிவஞானமும் கூறியுள்ளார்.