பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. தேசியத் தலைவர் காமராஜர் முருக. தனுஷ்கோடி அவர்களின் கருத்துக்கு அரண்கட்டிய (popuño, Congress Centinary. (டிசம்பர் 18-ஆம் நாள் @ayoffau;3.51) 6Taşp L133 fou?co "Congress Leaders From the South" என்ற ஒரு கட்டுரை வெளிவந்தது. ஆஞ்சநேயலு ஆதாரம் டாக்டர் A. ஆஞ்சநேயலு என்பவர் அக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், அவர் ஒரு மர்மத்தை எழுப்பியுள்ளார். அது எனன? "The intellectual elite of South Indian also Played a vital role in the genesis of the Congress - a role that has not been adeguately appreciated" 'இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் தோற்றத்திற்கு, தென்னிந்தியாவிலே உள்ள அருமையானதோர் அறிவுத் திறனுடைய அணி, பலமாகத்தனது கட்சிப் பணிகளை ஆற்றியது." 'அப்படிப்பட்ட அணியின் பணிகள், மனம் திறந்து போதுமான அளவில் எவராலும் பாராட்டப்படவில்லை' என்கிறார் டாக்டர் A. ஆஞ்சநேயலு அவர்கள். அறிவுபலம் உள்ள அந்த அருமையான அணி ஆற்றிய பலமான கட்சிப்பணிகள்தான் என்ன? அவற்றின் உண்மைதான் என்ன? தேசத்தொண்டிலும் இந்த மர்மம் ஏன்? தென்னிந்தியர் என்றதனால் ஏற்பட்ட காழ்ப்பா? இல்லையென்றால், வேறு என்னவாக இருக்க முடியும்? அடுத்து அதே டாக்டர் ஆஞ்சநேயலு, வருத்தப்பட்டு வேதனைப்படுவதைப் பாருங்கள். "Even the Officia! Historian of the Congress, Dr. B. Pattabi Sitaramayya, Concedes the Point, that the actual Origin of the idea was Shrouded in Mystery. காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான வரலாற்றாசிரியர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட டாக்டர் B.பட்டாபி சீத்தாராமையா கூட, அறிவுத் திறமைமிக்க அருமையான அந்த அணி ஆற்றியக் கட்சிப் பணியை ஏற்றுக் கொள்ளாமல், அது யாருக்கும் தெரியக்கூடாத ஒரு மறைபொருளாகவே மறைத்துவிட்டார்” அந்தத் தேசபக்திப்பணி எவ்வாறு மறைக்கப்பட்டது தெரியுமா? செத்த ஒரு பிணத்தைப் போர்வையினால் மூடி மறைத்துச்சவமுக்காடிடுவார்களே மக்கள், அதனைப்போல! "ஆனால், அந்த நாட்டுத் தொண்டு மறைக்கப்பட்ட மர்மம்தான் புரியவில்லை." என்கிறார் டாக்டர்D.ஆஞ்சநேயலு அவர்கள்